கூரைப் பள்ளிகள்: தீவிர நடவடிக்கையில் கலெக்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூரைகளுடன் இயங்கி வரும் பள்ளிகளில் அரசு உத்தரவுப்படி கூரைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்,பாதுகாப்பு நடடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என பள்ளிகளின் தாளாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கூரைகளை ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பல்வேறுமாவட்டங்களில் இதற்கான பணிகள் தொடங்கி விட்டன.

மதுரையில் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பொன்குமார் அவசர கூட்டத்தைக் கூட்டினார். அதில் மதுரைமாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளின் தாளாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் கூரைகளைஉடனடியாக அகற்றுமாறு பொன்குமார் உத்தரவிட்டார். கூரையுடன் இயங்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.ஆர்.சர்மா கூட்டிய கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 110 தனியார்பள்ளி தாளாளர்களும் கலந்து கொண்டனர். கூரையுடன் இயங்கி வரும் பள்ளிகள் உடனடியாக அதை மாற்றி விடவேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூரைப் பள்ளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்டஆட்சித் தலைவர் ஆனந்த் பாட்டீல் தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

திருச்சியில் கூரையுடன் இயங்கி வந்த 12 பள்ளிகளை நகர மேயர் சாருபாலா தொண்டமான் நேரில் பார்த்துஆய்வு செய்தார். அந்தக் கூரைகளை உடனடியாக அகற்றி விடுமாறு பள்ளி நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டம் அயங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கூரையில் சில நாட்களுக்கு முன்பு தீப்பிடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்தப் பள்ளியில் 2,000 மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+