பள்ளிகளுக்கு 14 கடும் விதிமுறைகள் அறிவிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசு 14 விதிமுறைகளை அறிவித்துள்ளது.
கும்பகோணம் துயரச் சம்பவம் போல் இனிமேல் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு முன் எச்சரிக்கைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்தொடர்பாக தமிழக அரசு 14 விதிமுறைகளை அறிவித்து உள்ளது.
அதன் விவரம்:
1.பள்ளிகளில் கீற்றுக் கொட்டகை, ஓலை கொட்டகைகளில் வகுப்பறைகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. அத்தகைய கொட்டகைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
2.மாடிக்கட்டிடங்களில் வகுப்புகள் இருந்தால் அவசர நேரத்தில் மாணவ மாணவிகள் எளிதில் வெளியேறும் வகையில் போதுமான வழிகள் இருக்க வேண்டும்.
3. பழுதடைந்த நிலையில் இருக்கும் கட்டடங்களில் எக்காரணம் கொண்டும் வகுப்புகள் நடத்தக் கூடாது.உடனடியாக அக்கட்டிடங்களை பழுதுபார்க்க பொதுப்பணித்துறை செயற் பொறியாளரை தொடர்பு கொண்டுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
4. பள்ளிக் கட்டடங்களில் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் மின் இணைப்புகள் இருப்பின் அவற்றைஉடனடியாக சரி செய்ய வேண்டும்.
5. பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் கிணறு, ஆழமான குட்டைகள் இருந்தால், மாணவ மாணவியர்கள்அவற்றை அணுக முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தி, அவற்றை கம்பி வலை கொண்டு மூட வேண்டும்.
6. மாணவ, மாணவியர்கள் வேலை நேரத்தில் பள்ளியை விட்டு வெளியில் செல்ல தலைமை ஆசிரியரோ அல்லதுவகுப்பாசிரியரோ அனுமதிக்கக் கூடாது. மாணவ மாணவியர் பள்ளி முடிந்ததும் நேரடியாக வீட்டிற்கு செல்லவும்,விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு செல்லவும் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தவேண்டும்.
7. பள்ளி வளாகத்தில் சமையல் கூடம் தனிக் கட்டிடத்தில் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும்.சத்துணவு சுகாதாரமான முறையில் வழங்கப்பட வேண்டும். சமையலுக்குப் பின் அடுப்பில் உள்ள நெருப்புஅணைக்கப்பட்டு விட்டதா என்பதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
8. பள்ளி வளாகத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை மூடி வைத்து பாதுகாக்கவேண்டும்.
9. பள்ளிகளில் தீ அணைக்கும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தது 5 வாளிகளில்மணல் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
10. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு தனியாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
11. இலவச பேருந்து பயண அட்டைகள் பெற்றுள்ள மாணவ, மாணவியர்கள் ஓடும் பேருந்தில் ஏறுதல், இறங்குதல்மற்றும் படிக்கட்டுப் பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது என்பதை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
12. பள்ளி வளாகத்திலோ அல்லது அருகிலோ தின்பண்டங்களை தனியார் விற்பனை செய்வதை அனுமதிக்கக்கூடாது.
13. இலவசமாக எந்த ஒரு தனி நபர், நிறுவனங்கள் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களை மாணவ,மாணவியர்களுக்கு பள்ளியில் வழங்கிட தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக்கூடாது.
14. கழிவு நீர்த் தொட்டிகள் எக்காரணம் கொண்டும் திறந்த நிலையில் இருக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும் என இன்று தமிழக அரசு தனது அவசர உத்தரவில்கூறியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications