கூரைகளை அகற்ற ஜூலை 30 வரை ஜெ. கெடு
சென்னை:
பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள கூரைகளை ஜூலை 30ம் தேதிக்குள் பள்ளி நிர்வாகங்கள் அகற்றி விட வேண்டும். இல்லாவிட்டால்அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகம் முழுவதிலும், கீற்றுக் கொட்டகைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் வருகிற30ம் தேதிக்குள் கூரை அகற்றப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்படும் வரை அவற்றின் கீழ் வகுப்புகள் நடத்தப்படக் கூடாது. 30ம் தேதிக்குள் கீற்றுக் கொட்டகைகளைஅகற்றி மாற்று ஏற்பாடுகள் செய்யாத பள்ளி நிர்வாகங்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்பட்ட விவரத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகள் தங்களது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கை மூலம்அளிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை தங்களது மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கீற்றுக் கொட்டகையின் கீழ்இயங்கி வரும் பள்ளிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீற்றுக் கொட்டகைகள் அகற்றப்பட்டதாக அறிக்கை அளிக்கும் பள்ளிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட தலைமை கல்வி அதிகாரி,தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 2 பேர் அடங்கிய குழு நேரில் சென்று ஆய்வுசெய்து முற்றிலும் தீப்பிடிக்காத கூரைகள் போடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கும்பகோணத்தில் நேர்ந்த கொடூரத்தை உணர்ந்து பள்ளி நிர்வாகங்கள் இந்த நடவடிக்கையை துரிதப்படுத்தி, இளம் குழந்தைகளுக்கு சிறந்தஎதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications