சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 5 நீதிபதிகள்
டெல்லி:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விரைவில் 5 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 49 நீதிபதி பதவிகள் உள்ளன. இதில் 20 நீதிபதி பணியிடங்கள் காலியாகஉள்ளன. இந் நிலையில் வருகிற 24ம் தேதி மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ளது. இந்தநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
எனவே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் தேவை என்று கூறி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசும், சென்னைஉயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்து மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது.
இந்த பரிந்துரையின் பேரில் கூடுதலாக 5 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மத்திய அரசுபரிந்துரை செய்யவுள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில்,குடியரசுத்தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு:
மதுரை உயர்நீதிமன்ற கிளைத் திறப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையை மதுரையில் துவக்க வேண்டுமானால் அதற்கு மக்களவையில் ஒரு சட்டம்நிறைவேற்றியாக வேண்டும். ஆனால், குடியரசுத் தலைவர் உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவேமதுரை உயர்நீதிமன்றக் கிளையை துவக்கும் அறிவிப்புக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications