கருணாநிதி வீட்டு பந்தலை அகற்ற கோரிக்கை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீட்டு முன்பு போடப்பட்டுள்ள குடிசைப் பந்தலை அகற்றவேண்டும், இல்லாவிட்டால் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிமுக மாநகராட்சிக் கவுன்சிலர்வெற்றிவேல், மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரிடம் வெற்றிவேல் கொடுத்துள்ள புகார் மனு:சென்னை மாநகராட்சி சட்டம் 258 மற்றும் 261 ஆகியவற்றின் கீழ் மாநகராட்சிப் பகுதிகளில் அனுமதி பெறாமல்குடிசைகள் போடுவது, பந்தல் அமைப்பது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டின் முன்பாக மிகப் பெரிய கூரைப் பந்தல்போடப்பட்டுள்ளது. இங்கு தீவிபத்து ஏற்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பெரும் ஆபத்து ஏற்படும்.
இதேபோல, திமுகவின் மற்றொரு கிளை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் வளாகத்திலும்மிகப் பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. இங்கு தீவிபத்த ஏற்பட்டாலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.
முன்பு திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடிராமமூர்த்தியின் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த பந்தலை வலுக்கட்டாயமாக அகற்ற உத்தரவிட்டார்.
எனவே, தற்போது கும்பகோணத்தில் நடந்துள்ள கோர விபத்தை கருத்தில் கொண்டு அதுபோன்ற விபத்துக்களைதவிர்க்கும் பொருட்டு கருணாநிதியின் வீடு மற்றும் அன்பகத்தின் முன்புள்ள குடிசைகளை அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications