ரஜினி நேரில் ஆறுதல்: சத்யநாராயணா பேட்டி
கும்பகோணம்:
ரஜினி சென்னை திரும்பியதும் கும்பகோணம் தீவிபத்து நடந்த இடத்திற்கு வருவார் என்றும் பாதிக்கப்பட்டகுடும்பங்களுக்கு நிவாரணம் அளிப்பது குறித்து அறிவிப்பார் என்றும் ரஜினி தலைமை ரசிகர் மன்ற தலைவர்சத்யநாராயணா கூறினார்.
கும்பகோணம் வந்த சத்யநாராயணா, ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தீவிபத்து நடந்த கிருஷ்ணா பள்ளிக்குசென்று பார்வையிட்டார். பின்னர் தீவிபத்தில் காயமடைந்த குழந்தைகளை அரசு மருத்துவமனைக்குச் சென்றுபார்த்தார். அக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறரஜினி என்னை அனுப்பினார். இறந்த குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில் ரஜினி சென்னை திரும்புகிறார். அதன்பின் கும்பகோணத்திற்கு வருவது குறித்தும்,பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் எவ்வளவு நிதி அளிப்பது என்பது குறித்தும் ரஜினி அறிவிப்பார்என்றார் சத்யநாராயணா.












Click it and Unblock the Notifications