13 ஆசிரியைகள் போலீஸில் சரண்
கும்பகோணம்:
தீவிபத்து நடந்த கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியின் ஆசிரியைகள் 13 பேர் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீஸார் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய பின்விடுவித்தனர்.
கும்பகோணம் தீவிபத்தின்போது ஆசிரியைகள் அனைவரும் உயிர் தப்பி ஓடி விட்டதாக புகார் எழுந்தது.அதேபோல, இந்த தீவிபத்தில் எந்த ஆசிரியையும் இறக்கவில்லை.
இந் நிலையில் தலைமறைவாக இருந்த சில ஆசிரியைகள் தங்களது நிலையை விளக்கி பேட்டியளித்தனர். இந்தச்சூழ்நிலையில் கும்பகோணம் காவல் நிலையத்திற்கு 13 ஆசிரியைகள் திடீரென்று வந்தனர். தாங்கள் சரண்அடைவதாக போலீஸாரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் 2 மணிக்கு அவர்கள் கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்து தங்களது நிலையை விளக்கி அறிக்கைஅளித்தனர். பின்னர் அவர்களிடம் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் கல்யாண சுந்தரம் விசாரணைநடத்தினார். சுமார் 8 மணி நேரம் அவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். பின்னர் இரவு 11 மணி வாக்கில்அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணைக்குப் பின்னர் வெளியே வந்த ஆசிரியைகள், முற்றுகையிட்டிருந்த செய்தியாளர்களையும்,புகைப்படக்காரர்களையும் தவிர்த்து விட்டு வேகமாக சென்று விட்டனர். சிலர் முகங்களை மூடிக் கொண்டுவெளியேறினர். போகும்போது, சில ஆசிரியைகள், மாலை 6 மணிக்கு மேல் தங்களை காவல் நிலையத்தில் வைத்துவிசாரணை செய்தது சட்டப்படி தவறானது என்று புகார் தெரிவித்தவாறு சென்றனர்.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி நடராஜ் கூறுகையில், மீண்டும் இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காகமீண்டும் விசாரணைக்கு வருமாறு ஆசிரியைகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தீவிபத்துநடந்தபோது குடிசையின் கீழ் வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்த 3 ஆசிரியைகளிடம் தீவிர விசாரணைநடத்தப்பட்டது.
மரியம் ஏஞ்சலின் என்ற ஆசிரியைதான் முதலில் விசாரிக்கப்பட்டார். அவர் மீதுதான் நிறைய புகார்கள்வந்துள்ளன. பின்னர் தேவி, மகாலட்சுமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இருவருக்கும் தீக்காயம்ஏற்பட்டுள்ளது.
பின்னர், கீதா, சங்கரி, சாந்தி, ஜீவா, மணிமொழி, இந்திரா, ஆசிரியர் சிதம்பரம் ஆகியோரும் விசாரணைக்குவந்திருந்தனர். இவர்களில் சிதம்பரம் சம்பவம் நடந்தபோது, மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார்.
விசாரணையின்போது அனைத்து ஆசிரியர்களுமே, நாங்கள் தலைமறைவாக இருக்கவில்லை. பொதுமக்களால்தாங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே வீட்டுக்குள்ளேயே இருந்தோம், போலீஸாரின்விசாரணைக்கு ஒத்துழைக்க நாங்கள் முழுமையாக தயாராக இருப்பதாக எங்களிடம் தெரிவித்தனர் என்றார்நடராஜ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications