கருணாநிதி வீட்டு பந்தல் திடீர் அகற்றம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகம் ஆகியவற்றின் முன்புஅமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை பந்தல் இன்று திடீரென்று அகற்றப்பட்டது.
கும்பகோணம் தீவிபத்தைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் வீடு, திமுக இளைஞர் அணிதலைமையகமான அன்பகம் ஆகியவற்றின் முன்பு அமைக்கப்பட்டுள்ள குடிசைப் பந்தலையும் அகற்ற சென்னை மாநகராட்சிநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநகராட்சி ஆணையர் விஜயக்குமாரிடம், அதிமுக கவுன்சிலர் வெற்றிவேல் மனுகொடுத்திருந்தார்.
இந் நிலையில் இரு இடங்களிலும் உள்ள குடிசைகள் இன்று அவசரம் அவசரமாக அகற்றப்பட்டன. கருணாநிதியின் வீட்டுவளாகத்தில் போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தல், வீட்டு முன்பு போடப்பட்டிருந்த பந்தல் ஆகியவை பிரித்து எடுக்கப்பட்டன.
அதேபோல அன்பகம் வளாகத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையும் இரவோடு இரவாக அகற்றப்பட்டு விட்டது.தற்போது அங்கு வெறும் மூங்கில் கம்புகளே நின்று கொண்டுள்ளன. அவற்றையும் சில ஊழியர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
மாநகராட்சி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்கும் வகையில் திமுகவினரே இந்த பந்தல்களை அகற்றி விட்டதாகத் தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications