மேட்டூர் அணையை திறக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
மேட்டூர் அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் பாசனப் பகுதி விவசாயிகளின் நலன் கருதிஅணையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், கடந்த காலங்களை விட மேட்டூர் அணையில் தற்போதுஅதிகமாகவே தண்ணீர் உள்ளது. தற்போது அணையில் 73 அடி நீர் உள்ளது. அணைக்கும் விநாடிக்கு 9,000 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் பெரு வெற்றி கிடைத்த நிலையில், மத்தியில் திமுகஅங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின்வலியுறுத்தலின் பேரில், கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து தற்போது 73 அடி என்ற நிலையைஎட்டியுள்ளது. இந் நிலையில் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மேட்டூர் அணைதிறக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தஞ்சை விவசாயிகள் கைது:
இதற்கிடையே கர்நாடக மாநிலத்திலிருந்து காவிரி நீரைத் திறந்தவிடக் கோரி மத்திய அரசு அலுவலகங்கள் முன்புஇன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர் .
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications