ராமேஸ்வரத்தில் 3 இலங்கை தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து கள்ளப் படகு மூலம் தமிழகம் வந்த 3 இலங்கைத் தமிழர்களை போலீஸார் கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து சிலர் கள்ளப் படகுகள் மூலம் ராமேஸ்வரம் நோக்கி வருவதாக போலீஸாருக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து ஓலைக்குடா கடற்கரை பகுதியில் ராமேஸ்வரம் போலீஸார் முகாமிட்டு கண்காணித்துவந்தனர்.

அப்போது படகில் வந்து இறங்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள்யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகேஷ்வரன், மஞ்சுளா, திருகோணமலையைச் சேர்ந்த சுபாஷினி என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேர் தவிர மேலும் 6 பேரும் படகில் வந்ததாகவும், அவர்கள் 6 பேரும் தப்பி விட்டதாகவும் பிடிபட்ட 3பேரும் தெரிவித்தனர். இவர்கள் இலங்கையில் சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து தமிழகம்வந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+