துக்கத்திலும் விடாத சினிமா மோகம்!

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

தீவிபத்தில் 93 குழந்தைகளைப் பறிகொடுத்த துக்கத்திலும் கூட கும்பகோணம் மக்கள் சினிமா நடிகர்களைப் பார்க்கபோட்டி போட்டுக் கொண்டு முயன்றதால் போலீஸார் தடியடி நடத்த வேண்டியதாயிற்று.

தமிழ்த் திரைப்பட உலகினர் தனி பேருந்துகளில் கும்பகோணம் சென்றனர். நடிகர்கள் சரத்குமார், வடிவேலு,அலெக்ஸ், தியாகு, இயக்குநர்கள் பாரதிராஜா, வி.சேகர், சேரன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் கிருஷ்ணா பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல்தெரிவித்தனர்.

சினிமா நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோர் வருவதை அறிந்த கும்பகோணம் மக்கள் கிருஷ்ணா பள்ளி அருகேகாலை முதலே கூடியிருந்தனர். சோகத்தையும் மீறிய சினிமா மோகம் அங்கு காணப்பட்டது.

நடிகர்கள் வந்தவுடன் அவர்களைப் பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்ததால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.திரைப்படத் துறையினரை பாதுகாக்கும் நோக்கத்தில் போலீஸார் லேசான தடியடி நடத்திக் கூட்டத்தைக்கலைத்தனர்.

இதில் 20க்கும் மேற்பட்டோர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்தனர். இதில் சிலருக்கு லேசான காயம்ஏற்பட்டது. கிருஷ்ணா பள்ளி எதிரே வைக்கப்பட்டிருந்த மோட்ச தீபத்தையும் கூட்டத்தினர் தட்டி விட்டு விட்டனர்.

இதேபோல, கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும் சினிமாக்காரர்களைப் பார்க்க கூட்டத்தினர்அலைமோதியதால் அங்கும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+