சென்னையில் 10 மாணவ, மாணவிகள் மிஸ்ஸிங்
சென்னை:
சென்னை அயனாவரம் மாநகராட்சிப் பள்ளியில் படித்து வரும் 10 மாணவிகளைக் காணவில்லை என்றுபோலீஸில் புகார் தரப்பட்டுள்ளதால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம், செக்ரடேரியேட் காலனி பகுதியில் மாநகராட்சிப் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் 4மாணவர்களும், 5 மாணவிகளும் நேற்று முதல் காணவில்லை என அவர்களது பெற்றோர் போலீஸில் புகார்கொடுத்துள்ளனர்.
இதையடுத்து இணை ஆணையர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல்வேட்டை நடந்தது. அப்போது, இந்த 9 மாணவ, மாணவியரும், லீலாவதி என்ற தங்களுடன் படிக்கும் மாணவியின்வீட்டுக்குச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து லீலாவதியின் தாயாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது 9 மாணவ, மாணவியரும்,லீலாவதியும் சாதாரண உடையில் வெளியே சென்றதாகவும் இன்னும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 9 மாணவ, மாணவியரும் தங்களது வீடுகளில் பெற்றோர் கொடுமைப்படுத்தி வருவதாக தன்னிடம்தெரிவித்ததாகவும் லீலாவதியின் பெற்றோர் தெரிவித்தனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் 10 பேரும் கோவைக்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துபோலீஸ் படை கோவை விரைந்துள்ளது. 10 பேரும் ஊட்டிக்குச் சென்றிருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications