இராக்: உயிர் தப்புவார்களா 3 இந்தியர்கள்?
பாக்தாத்:
இராக்கில் 3 இந்தியர்களை கருப்புக் கொடிகள் என்ற தீவிரவாத அமைப்பு பணயக் கைதிகளாகப்பிடித்துச் சென்றுள்ளது.
அமெரிக்கா ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் கே.ஜி.எல். என்ற குவைத் நிறுவனத்தில்பணியாற்றி வரும் அந்தர்யாமி, திலக்ராஜ், சுக்தேவ் சிங் மற்றும் இரு கென்ய நாட்டினர், ஒரு எகிப்துநாட்டவர் ஆகியோரை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர்.
அமெரிக்காவுக்கு உணவு சப்ளை செய்யும் பணியை ரத்து செய்துவிட்டு, இராக்கில் இருந்து அந்தகுவைத் நிறுவனம் வெளியேற வேண்டும், இல்லாவிட்டால் இந்த 6 பேரின் தலைகளையும் வெட்டிக்கொல்வோம் என தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த 6 பேரும் துபாய் உணவு நிறுவனத்தின் லாரிகளை இராக்கில் ஓட்டி வந்தவர்களாவர். இந்த 6பேரும் தங்களது பிடியில் இருப்பதை உறுதி செய்யும் வீடியோவையும் தீவிரவாதிகள்வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து மூன்று இந்தியர்களையும் மீட்கும் பணிகளை வெளியுறவுத்துறை அமைச்சகம்முடுக்கிவிட்டுள்ளது. துபாய், குவைத், இராக்கில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலமாக இந்தப் பணிநடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மூன்று பேரின் விவரங்களைத் திரட்டித் தருமாறு உள்துறைஅமைச்சகத்துக்கு பிரதமரின் அலுவலரம் உத்தரவிட்டுள்ளது.
இந் நிலையில் இந்த 6 பேரின் புதிய வீடியோவை தீவிரவாதிகள் இன்று அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் திலக் ராஜ் இந்தியில் பேசுகையில்,
நாங்கள் குவைத்துக்குத் தான் வேலைக்கு வந்தோம். ஆனால், எங்களை கட்டாயப்படுத்திஇராக்குக்கு அனுப்பிவிட்டனர். நாங்கள் அமெரிக்கர்களுக்கு உதவி செய்வதாய், இந்ததீவிரவாதிகள் நினைக்கிறார்கள். அதனால் தான் கடத்தி வைத்துள்ளார்கள். எங்களுக்கு உணவுகொடுத்து நல்லபடியாகவே வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த பணயக் கைதி பேசுகையில்,
நாங்கள் குவைத் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவர்களால் ஏமாற்றப்பட்டு இராக்குக்குள்வந்துவிட்டோம். இனி அமெரிக்கர்களுக்காக நாங்கள் எந்த வேலையும் பார்க்க மாட்டோம்.அமெரிக்கர்களுக்கு உதவி செய்வது மகா பாவச் செயல் என்பதை உணர்ந்துவிட்டோம்.
எங்களை எப்படியாவது மீட்டுச் செல்லுங்கள். இல்லையெனில் எங்களை இவர்கள் துண்டு,துண்டாக வெட்டிவிடுவார்கள்.
குவைத்துக்கு வேலைக்கு வந்த எங்களை அமெரிக்கர்கள் மற்றும் யூதர்களுக்காக வேலை பார்க்கச்செய்துவிட்டார்கள். எங்களை எப்படியாவது மீட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்களைவிடுவிக்க உரிய முயற்சிகள் எடுக்குமாறு இராக் இடைக்கால அரசுக்கும், அங்குள்ள அமெரிக்கத்தூரகத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம்அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications