பெங்களூர் மாநாடு: நெடுமாறனுக்கு அனுமதி
சென்னை:
பெங்களூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேச தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று அனுமதிவழங்கியுள்ளது.
பொடா சட்டத்தில் கைதான கைதான பழ.நெடுமாறன் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார்.ஆனால் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கும், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கவும் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனை விதித்திருந்தது.
அதன்பின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டது. தேர்தலுக்குப் பின்நெடுமாறன் எந்த கூட்டத்திலும் பேசவில்லை. இந் நிலையில் நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
ஜூலை 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு நடைபெறவுள்ளது.இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் நான், மாநாட்டில் உரை நிகழ்த்த வேண்டும். அதற்கு நீதிமன்றம் அனுமதிதரவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதோடு மாநாட்டில் தான் வெளியிடப் போகும், பழந்தமிழ் பரவிய நாடுகள் என்ற நூலையும் நீதிமன்றத்தில்சமர்ப்பித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தினகரன், நெடுமாறனுக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனையைத்தளர்த்தி, மாநாட்டில் பேச அனுமதியளித்தார்.
அதேபோல் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தாயப்பன் மற்றும் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கும்மாநாட்டில் பேச அனுமதியளித்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
