புட்டுப் புட்டு வைக்கும் சிபிஐ: திணறும் அலி
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் டி.ஐ.ஜி. முகமது அலிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும்நடந்த மோசடியில் நேரடிப் பங்கு இருப்பதாக சிபிஐ பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அலி, உதவி கமிஷனர் சங்கர், மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி., அதிகாரிராமசாமி சாது ஆகியோர் இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு, எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகரநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு நீதிபதி அருள்ராஜ் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முகமது அலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கட்ராமன் கூறியதாவது:
சி.பி.சி.ஐ.டி. என்றாலே முகமது அலி தானா? போலி முத்திரைத்தாள் மோசடியை விசாரிக்கும் பணியை செய்வதுஇன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பிதான். அவர்கள் விசாரித்து எஸ்.பிக்கு அறிக்கை தருவார்கள். அதன் பின்னர்தான்முகமது அலிக்கு விவரம் தெரியும். இதில் அவரை மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்?.
இந்த வழக்கில் டேப் ஆதாரம் சிக்கியதாக சி.பி.ஐ. தெரிவித்தது. முதலில் அதில் இருந்த குரல் தெல்கியின் குரல்என்று சொன்னார்கள். பின்னர் தெல்கி கும்பலுக்கு சொந்தமான குரல் என்று சொன்னார்கள். இந்த வழக்கிற்கும்,முகமது அலிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே, அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்என்று வாதாடினார்.
சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல் கூறியதாவது:
இந்த வழக்கில் முதலில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு கடந்த 2002ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி அழைத்துவரப்பட்டவர் பாலாஜி. அப்போது அவரிடம் இருந்து 3,750 ரூபாய்க்கு போலி முத்திரைத்தாள்கள் இருந்தன.அவரை அந்த முத்திரைத் தாள்களோடு திரும்பி அனுப்பி வைத்தவர் யார்?.
முகமது அலி உத்தரவுப்படிதான் பாலாஜி அனுப்பி வைக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி எங்களுக்குவாக்குமூலம் கொடுத்துள்ளார். அதற்கு இரண்டு நாள் கழித்துதான் பாலாஜியின் குளோபல் டிரஸ்ட் வங்கியின்கணக்கு முகம்மது அலிக்குத் தெரியாமல் முடக்கப்படுகிறது.
இது தெரிந்ததும் முகமது அலி விசாரணை அதிகாரியை அறைக்கு அழைத்து திட்டி, என்னை கேட்காமல் இந்தவழக்கில் இனிமேல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். இதுவும் வாக்குமூலத்தில் உள்ளது.
நிஜாமுதீன் கைதுக்குப் பிறகு அவரது வங்கிக் கணக்கில் 75 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட பிறகு 75 லட்சம் ரூபாய் எப்படி எடுக்கப்பட்டது?.
நிஜாமுதீன் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. நிஜாமுதீன் சி.பி.சி.ஐ.டியில் தாமாகவே சரண்அடைந்தார். அவரை வழக்கறிஞர் சுந்தரராமன் அழைத்து வந்த போது, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில்பெயரை எழுதிவிட்டார். பதிவேட்டில் நிஜாமுதீன் பெயர் இருந்ததால்தான் அவர் கைது செய்யப்பட்டார்.இல்லையென்றால், பாலாஜியை போலவே அவரும் திரும்ப அனுப்பப்பட்டிருப்பார்.
சென்னையில் சி.பி.சி.ஐ.டி சோதனை நடத்திய இரண்டு இடங்கள் அண்ணாநகர் மற்றும் ஷெனாய் நகர்.இவர்களின் சோதனைக்குப் பின் ஷெனாய் நகரில் கர்நாடக போலீசார் சோதனை நடத்தினர். அந்த இடம்நிஜாமுதீன் வாடகைக்கு எடுத்திருந்த இடமாகும். சோதனையில் ரூ. 170 கோடி ரூபாய் மதிப்புள்ள போலிமுத்திரைத்தாள்கள் எடுக்கப்பட்டன.
இவர்கள் உண்மையான சோதனை நடத்தியிருந்தால், கர்நாடக போலீசார் சோதனை நடத்தும்போது போலிமுத்திரைத்தாள்கள் எப்படி கிடைத்திருக்கும்? இதன் பின்னர்தான் முகமது அலி, விசாரணை அதிகாரியை அழைத்து,உடனே, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடுகிறார்.
பிறகு விசாரணை அதிகாரி சட்ட நிபுணரிடம் ஆலோசனை செய்தபோது, விசாரணையும் முடிவடையவில்லை.குற்றப் பத்திரிகையும் முழுமையாக இல்லை. எனவே இதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது என்று சட்டநிபுணர் கூறுகிறார். விசாரணை முடியாமல், குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விடு என்று முகமது அலி கூறக்காரணம் என்ன?
நிஜாமுதீனிடம் சி.பி.ஐயின் மூத்த அதிகாரி விசாரணை நடத்தியபோது, எனது மனைவி மூலமாக முகமது அலிக்குஎட்டு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்று நிஜாமுதீன் தெரிவித்தார். நிஜாமுதீன் மனைவி மூலம் பெற்ற பணம்,தெல்ஜியின் பணமாகும்.
ஆடியோ கேசட்டில் இருப்பது டெல்ஜியின் குரல்தான். அறிவியல் பூர்வமாக அது நிரூபிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்று பேசும் தெல்கி, பல அதிகாரிகளின் பெயரைகூறியுள்ளார். அதில், முகமது அலியின் பெயரும் உள்ளது. டெல்கியிடம் அலி எவ்வளவு தொகையைப் பெற்றார்என, யார் மூலமாக கொடுக்கப்பட்டது என்பதை விசாரித்து வருகிறோம்.
அலியின் பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர். அவரை ஜாமீனில் விடுவித்தால் அவரும்வெளிநாடு சென்று விடுவார். சாட்சிகளையும் அழித்து விடுவார். அவர் தமிழகத்தில் நடந்த முத்திரைத்தாள் மோசடிவழக்கில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் நடந்த மோசடி வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி அருள்ராஜ் கூறியதாவது:
இந்த வழக்கில் முகமது அலிக்கு இருக்கும் தொடர்பு குறித்து ஆதாரம் உள்ளது. இவரை ஜாமீனில் விடுவித்தால்சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. எனவே இவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன் என்றார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications