இன்று நனவாகும் 40 ஆண்டு கனவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

கடந்த 40 ஆண்டுகளாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு கனவாக இருந்து வந்த மதுரைஉயர்நீதிமன்றக் கிளை இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது.

மதுரைக்கு உயர்நீதிமன்றக் கிளை என்பது இப்போது, நேற்று முடிவு செய்யப்பட்டதல்ல. கிட்டத்தட்ட 40ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும் என்று யோசனைஎழுந்தது.

1965ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில்,தென் மாவட்ட மக்கள் வழக்கு விசாரணைக்காக சென்னைக்கு வர வேண்டியது மிகவும் செலவானதாகவும்,அலைச்சலாகவும் உள்ளது. எனவே தென் மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் குறிப்பாக மதுரையில்உயர்நீதிமன்றத்தின் கிளையைத் தொடங்க வேண்டும் என தீர்மானம் கூறியது.

இதுதான் மதுரையில் உயர்நீதிமன்றக்கிளை அமைய வேண்டும் என்று எழுந்த முதல் கோரிக்கையாகும். அதன்பின்னர் தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் இதுதொடர்பாக 1969ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 1970ம் ஆண்டுஅக்டோபர் மாதம் ஒரு தீர்மானமாக இரண்டு தீர்மானங்களை –நிறைவேற்றியது.

அதன் பின்னர் 1971ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும்என்ற தங்களது கோரிக்கையை மறு பரிசீலனை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்தது,தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம்.

மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை அமைக்க வேண்டும் என்ற தென் மாவட்ட வழக்கறிஞர்களின்கோரிக்கைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த பல தரப்பு மக்களும், அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்கத்தொடங்கியதால் இந்தக் கோரிக்கை வலுப்பெற்று, பெரிதாக உருவெடுத்தது.

இதையடுத்து 1977ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் மற்றும் ஆணையர்ஆகியோர், மத்திய சட்டத்துறை செயலருக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், மதுரையில் உயர்நீதிமன்றக்கிளையை அமைப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கு வலு சேர்க்கும் வகையில், மாநில அரசின் சார்பிலும், தென் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம், பொதுமக்கள்தரப்பிலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் அனுப்பப்படவே, மத்திய அரசு, 1984ம் ஆண்டு ஜஸ்வந்த்சிங் கமிஷனை நியமித்து மதுரை கிளை தொடர்பாக ஆராய உத்தரவிட்டது.

ஜஸ்வந்த் சிங் கமிஷனும் விரிவாக ஆராய்ந்து மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை அமைப்பதன் அவசியத்தைமத்திய அரசுக்குத் தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக, மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை ஆரம்பிக்கலாம் எனமத்திய அரசு முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த 2000மாவது ஆண்டு மதுரை உலகநேரியில் உயர்நீதிமன்றக் கிளை கட்டடத்திற்குஅப்போதைய முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, கட்டடம் தயாராகியும் கூட திறப்பு விழா படாத பாடுபட்டு விட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படும் எனஅறிவிக்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை.

அதன் பிறகு 3 முறை தேதிகள் குறிப்பிட்டும் திறப்பு விழா நடைபெறவில்லை. இந் நிலையில் சென்னைஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள்,மதுரை கிளைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி போராட்டத்தில் குதித்தனர்.அவர்களுக்கு எதிராக மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட வழக்கறிஞர்களும் போராட்டம் செய்தனர். இதனால்தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு நீதிமன்றப் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

ஒரு வழியாக இன்று உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படவுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லஹோட்டிகிளையைத் திறந்து வைக்கிறார். இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளாக போராடி வந்த தென் மாவட்டவழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

தேசிய அளவில் அரசியல் வரைபடத்திலும், கலாச்சார வரைபடத்திலும் இடம் பெற்றிருந்த மதுரை இனிமேல் சட்டவரைபடத்திலும் முக்கியத்துவம் பெறப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+