குளோபல் டிரஸ்ட் வங்கி திடீர் முடக்கம்
சென்னை:
தனியார் வங்கியான குளோபல் டிரஸ்ட் வங்கியை, இந்திய ரிசர்வ் வங்கி திடீரென்று 3 மாதகாலத்திற்கு முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ளவங்கியின் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழந்துள்ளனர்.
குளோபல் டிரஸ்ட் வங்கி தொடர்ந்து பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாலும், வங்கியின்நடவடிக்கையை சீர்செய்யும் பொருட்டும் 3 மாத காலத்திற்கு வங்கியின் பண பரிவர்த்தனைஉள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக முடக்கி வைப்பதாக ரிசர்வ் வங்கிதிடீரென்று அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று பிற்பகல் 3 மணி முதல் வங்கியின் செயல்பாடுகள் அனைத்தும்முடக்கப்பட்டன. வங்கியின் கிளைகளுக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சிதான்காத்திருந்தது. ஏ.டி.எம் மையங்களும் இயங்கவில்லை.
இதனால் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் உள்ள குளோபல் டிரஸ்ட் வங்கியின்வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் ஸ்பென்சர் வளாகம்,ராதாகிருஷ்ணன் சாலை, அடையாறு, பெசன்ட் நகர், அண்ணா நகர், சேத்துப்பட்டு உள்ளிட்டஅனைத்துக் கிளைகளும் மூடப்பட்டுவிட்டன.
வங்கி முடக்கப்பட்ட தகவல் அறிந்ததும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கியின்கிளைகள் முன்பு கூடி கவலையுடன் காணப்பட்டனர்.
கோவை, மதுரையில் உள்ள வங்கிக் கிளைகளிலும் இதே நிலைதான். வார இறுதி நாளான நேற்று பலபேர் பொருட்களை வாங்க பணம் எடுக்க வந்து அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், தங்களது கணக்கிலிருந்துஅதிகபட்சமாக ரூ. 10,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஏ.டி.எம். மையங்கள்தற்போதைக்கு செயல்படாது என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரூ. 10,000 பணத்தை எடுக்க வங்கியின் பல்வேறு கிளைகளில் இன்றுநூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் கூடபணம் பொது மக்கள் எடுக்க வசதியாக வங்கி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலான கிளைகள் திறக்கப்படவில்லை. இதையடுத்து பணம் எடுக்க வந்தவர்கள்வங்கியில் இருந்த பாதுகாவலர்களைக் தாக்கினர். சில இடங்களில் வங்கியின ஜன்னல்கள்உடைக்கப்பட்டன.
போரூர் கிளையில் பணம் எடுக்க வந்த மாணவிகள் சிலருக்கும் பாதுகாவலருக்கும் தகராறுஏற்பட்டதில், பாதுகாவலரை மாணவிகள் தாக்கினர். இந்த நெரிசல், களேபரத்தில் சில பெண்கள்மயங்கி விழுந்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications