புரளிகள்: பள்ளிகளில் "காலர் ஐடி" தொலைபேசி !
சென்னை:
தொலைபேசி வசதி உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அழைப்பவர் யார் என்பதை அறியும் வசதிகொண்ட "காலர் ஐடி" கொண்ட தொலைபேசிகளை உடனடியாக பொருத்துமாறு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நகரில் கடந்த சில தினங்களாக பல பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளப்பப்பட்டுவருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 26 பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்வந்தது.
கும்பகோணம் தீ விபத்தையடுத்து பீதியில் இருக்கும் பெற்றோரை இந்த வெடிகுணடு புரளிகள்பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளன. குண்டு வைத்திருப்பதாக தகவல் பரவியதும் மாணவ,மாணவிகளை பள்ளிகளை விட்டு ஓடுமாறு ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளில் நெரிசலில் மிதிபட்டு பலத்தகாயமடைந்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை முதல் நாளை வரை பல பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் இந்தபுரளிகளுக்கு 3 மாணவிகள்தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில், இதுபோன்றநிகழ்வுகளை எதிர்காலத்தில் தவிர்க்கும் பொருட்டு புரளிகளை கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், பள்ளி நிர்வாகங்களும் இதுபோன்ற சமயங்களில் போலீஸார் துரிதமாகசெயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். இதற்காக தொலைபேசி வசதி உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் உடனடியாக காலர் ஐடி வசதி கொண்ட தொலைபேசிகளை நிறுவ வேண்டும்.
இதன்மூலம் குற்றவாளிகள் உடனடியாகப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதேபோல, காவல்நலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், அரசு கட்டடங்கள் ஆகியவற்றிலும் இந்தகாலர் ஐடி வசதி கொண்ட தொலைபேசிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
நெரிசலில் மிதிபட்ட குழந்தைகள்:
இதற்கிடையே, நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த 7 மாணவ, மாணவிகளுக்கு சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சூளைமேடு செளராஷ்டிரா தெருவில் உள்ள ஜான் மில்டன் நர்சரிப் பள்ளியில் வெடிகுண்டு புரளிகிளம்பியதும், அப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுத்துவந்தனர்.
பள்ளிக்குள் வேகமாக நுழைந்த அவர்கள் ஏற்கனவே பதற்றத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தகுழந்தைகளுக்கு மத்தியில் புகுந்து தங்களது குழந்தைகளைத் தேடினர்.
இந்த நெரிசலில் பாரதி, சங்கீதா, பிரின்ஸி, அப்துல் ரஷீத், வெங்கடேசன், பவித்ரா, பிரவீனாஆகிய7 குழந்தைகள் மிதிபட்டு பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அப்பல்லோவில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications