பஸ்சில் தாலி கட்ட முயன்ற வாலிபர் கைது
புதுக்கோட்டை:
ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவிக்குத் தாலி கட்ட முயன்ற வாலிபர் தர்ம அடி வாங்கி, போலீஸில்ஒப்படைக்கப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் இதேஊரைச் சேர்ந்த, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயிலும் மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்தார்.
தினமும் அந்த மாணவி கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்து நிலையம் வரை சென்று தனது காதலை ஏற்றுக்கொள்ளச் சொல்வது இவரது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் அந்த மாணவி பாலமுருகனை ஏறெடுத்தும்பார்க்கவில்லை.
இந் நிலையில் கல்லூரிக்குச் செல்ல அந்த மாணவி பஸ்சில் ஏறியபோது, பாலமுருகனும் உடன் ஏறிக்கொண்டார்.பஸ்சில் மாணவியிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தத் தொடங்கினார். இதற்கு அந்தமாணவியும் அவரது சக மாணவிகளும் பாலமுருகனைக் கண்டித்தனர்.
அதற்கு பாலமுருகன், இவள் எனது மாமன் மகள், எனவே நீங்கள் பேசாமல் இருங்கள் என்று கூற, உடனே அந்தமாணவி, இவர் எனது உறவினர் இல்லை. எனக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமும்இல்லை என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின்கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனைஅடித்தார். அவருடன் சேர்ந்து சக மாணவிகளும் பாலமுருகனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து பயணிகள் பாலமுருகனை பிடித்துக்கொண்டனர். இதனையடுத்து வடகாடு என்ற இடத்தில் பஸ்சைநிறுத்தி பாலமுருகனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒடும் பஸ்சில் மாணவிக்கு கட்டாயத் தாலி கட்டமுயன்றது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications