கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி
கொழும்பு :
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டி கொழும்பு, பிரேமதாசா அரங்கில் பகல் -இரவு ஆட்டமாக நடந்தது. இந்தப் போட்டியில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில்பாகிஸ்தான் களமிறங்கியது.
காயம் காரணமாக லட்சுமண் அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளர்அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் முதல்ஓவரிலேயே இர்பான் பதான், பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் நசீரை (1) வெளியேற்றினார்.
அடுத்த களமிறங்கிய சோயப் மாலிக் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை அவுட்டாக்க இந்தியபந்துவீச்சாளர்கள் திணறினார்கள். பாலாஜி ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவரை நிறுத்தி விட்டுநெஹ்ராவைக் கொண்டு வந்தார் கேப்டன் சவுரவ். பின்பு ஹர்பஜன் சிங், அனில் கும்ளே இருவரையும் மாற்றிமாற்றிப் பந்து வீசச் செய்தும் விக்கெட் விழவில்லை.
சோயப்பும், யாசிரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். இந் நிலையில் யாசிர் 31ரன்களில் கும்ளேவிடம் கிளீன் போல்ட் ஆனார். அதற்குப் பிறகு வந்த இன்சமாம், ஹர்பஜன் பந்தில் அவுட்டானார்.அவர் 34 ரன்கள் எடுத்தார். ஆனாலும் 35 ஓவர்களில் பாகிஸ்தான் 200 ரன்களைக் கடந்தது.
பின்னர் யூசப் யுகானா (29) கும்ளே பந்தில் அவுட்டாக மறுமுனையில் அதிரடியாக ஆடிய சோயப், ஒரு நாள்போட்டிகளில் தனது 4வது சதத்தை 95 பந்துகளில் எடுத்தார். அடுத்து அடித்து ஆடிய சோயிப் 143 ரன்களில் சச்சின்பந்தில் கைப் அற்புதமாகப் பிடித்த கேட்ச்சில் ஆட்டமிழந்தார். 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 127 பந்துகளில்அவர் எடுத்த 143 ரன்கள் பாகிஸ்தானின் ஸ்கோர் உயர பெரிதும் உதவியாக இருந்தது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications