தமிழ்ச் சங்கத்தில் புகுந்து கன்னடர்கள் கலாட்டா
பெங்களூர்:
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த உலகத் தமிழர் பேரவை மாநாட்டின்போது கன்னட அமைப்பைச்சேர்ந்தவர்கள் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனையும் தமிழர்களையும் கண்டித்து கோஷமிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் சாவகாசமாக வந்து தலையிட்டு அவர்களை அங்கிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றினர்.
பெங்களூர் அல்சூர் ஏரிக் கரையில் உள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில், உலகத் தமிழர் பேரவையின் மாநாடு நடந்தது.இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன், கொளத்தூர் மணி, உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், சேனாதிராசா, இயக்குநர் தங்கர்பச்சான்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் நெடுமாறன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தோடு கூட்டமாய் அமர்ந்திருந்த கன்னடரக்ஷன வேதிகே என்ற அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 பேர் திடீரென்று எழுந்து நெடுமாறனை திரும்பிப்போகுமாறும், தமிழர்களின் கூட்டத்தை ரத்து செய்யுமாறும் கோஷமிட்டனர். தமிழர்களையும் கண்டித்துகோஷமிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த தமிழர்கள் அவர்களை சூழ்ந்தபோது, அவர்களையாரும் ஏதும் செய்ய வேண்டாம் என தமிழ்ச் சங்கத் தலைவர் க.சுப்பிரமணியம் மைக்கில் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து பாதுகாப்பு என்ற பெயரில் தமிழ்ச் சங்கத்தின் வெளியே நின்றிருந்த 4 போலீசார் மிக சாவகாசமாகவந்து கன்னட அமைப்பினரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
வெளியில் சென்ற பிறகும் தமிழ்ச் சங்கத்துக்கு எதிராக கோஷமிட அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 10நிமிடம் கத்திவிட்டு, களைத்துப் போன பின்னர் அவர்களை போலீசார் ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவானதா என்று தெரியவில்லை.
இச் சம்பவம் நடந்தபோது மேடையில் இருந்த தலைவர்கள் அமைதி காத்ததோடு, கூட்டத்துக்குவந்திருந்தவர்களையும் அமைதியுடன் இருக்க வலியுறுத்தி, அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தனர்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications