பாதிக்கப்பட்டோருக்கு செஞ்சிலுவை சங்கம் ஆறுதல்
திருச்சி:
கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்தியசெஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் கூறி அவர்களுக்கு மன வள ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.
இதுகுறித்து இந்திய செஞ்சிலுவைச் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் விமலா ராமலிங்கம் திருச்சியில்செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் காந்திமதி, மாநிலத்தலைவர் டாக்டர் சரோஜினி வரதப்பன் உள்ளிட்ட பலர் கும்பகோணம் சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளைப்பார்த்து ஆறுதல் கூறினோம்.
கும்பகோணம் விபத்தால் மனதளவில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளகுழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மன வள ஆலோசனைகள் கூறிஅவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இதற்காக எங்களது அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து 2 நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.இதேபோல, குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மன வள ஆறுதல் கூறிய அனுபவம் உள்ள மேலும் 5பேரும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த ஆலோசனைகள் தொடங்கும். இந்த ஆலோசனையின்போது கும்பகோணத்தில்உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தேர்ந்தெடுக்கும் 20 மாணவ, மாணவியர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச்சேர்ந்த தலா 5 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications