ஒற்றுமையை குலைக்க சதி: இலங்கை எம்.பி
பெங்களூர்:-
ஈழத் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சதி நடந்து வருவதாக மலையக மக்கள் முன்னேற்ற முன்னணித்தலைவர் சந்திரசேகரன் கூறினார்.
பெங்களூரில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில் அமைப்பின்தலைவர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தந்தை பெரியார்திராவிட இயக்கத் தலைவர் கொளத்தூர் மணி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன்,சேனாதிராசா, இயக்குநர் தங்கர்பச்சான் உட்பட பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சந்திரசேகரன் பேசியதாவது:
இலங்கையில் போராளிகள் கையில் ஆயதங்கள் இருந்தாலும் அவர்கள் நெஞ்சில் இருப்பது தமிழ் என்ற சிந்தனைமட்டும்தான். இலங்கையில் நடைபெறும் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சொன்ன காலம் மாறிவிட்டது.சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டமே இது என்பதை உலக நாடுகள் தற்போது உணர்ந்துள்ளன.
இந் நிலையில் ஈழத் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க சதி தற்போது நடந்து வருகிறது. அங்கு ஆளுங்கட்சிஎதிர்க்கட்சியுடன் இணைந்து தமிழர்களின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தவதில் ஒன்றுபட்டு செயல்பட்டுவருகிறார்கள் என்றார்.
மாநாட்டில் சுப.வீரபாண்டியன் பேசியாதாவது:
தமிழனின் பெருமையை நமது தமிழ் நூல்கள் கூறுகின்றன. சங்க காலத்திலேயே தமிழன் அறிவியலில் பலசாதனைகளைச் செய்து காட்டியுள்ளான் என்று அந் நூல்கள் வாயிலாக நாம் அறிகிறோம். நமது அறிவியல்முன்னேற்றத்துக்கு கல்லணையும், தஞ்சை பெரிய கோயிலும் எடுத்துக்காட்டுகளாகும் என்று கூறினார்.
காசி ஆனந்தன் பேசியதாவது:
தமிழகத்தில் சமையலறைையில் கூட தமிழ் இல்லை. திரைப்பட பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.தமிழ் பேசுவது சிறுமையாகக் கருதப்படும் நிலை தமிழகத்தில் உள்ளது. இந் நிலை மாறவேண்டும். தமிழ்செம்மொழியானதில் நமக்குச் சிறப்பில்லை. தமிழ் நம்மொழி ஆக வேண்டும்.
இந்த விழாவில் எனக்கு உலகப் பெருந்தமிழர் என்ற விருதை வழங்கியிருக்கிறார்கள். இந்த விருதைப் பெறுவதுஎனக்கு சற்று கூச்சமாக உள்ளது என்றார்.
தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணியரசன் பேசியதாவது:
பிற மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் தங்களது நலனைக் காக்க சொந்தக் கட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தில்இயங்கும் கட்சிகளின் கிளைகளைத் தொடங்குவதில் எந்த நன்மையும் இல்லை. மேலும் கர்நாடகத்தில் இருக்கும்தமிழர்கள் கர்நாடகத்தின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பேசினார்.
கொளத்தூர் மணி பேசுகையில்,
சூலம் வழங்கும் தொகாடியாவை சாது என்கிறார்கள். தமிழ் வளர வேண்டும் என்று கூறும் நம்மை தீவிரவாதிகள்என்கிறார்கள்.
கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும். சடங்குகள் தமிழில் இருக்க வேண்டும். சாதி உணர்வைவிடுத்து தமிழ்த் தேசம் அமைய பாடுபட வேண்டும் என்றார்.
சேனாதிராசா பேசுகையில்,
சேது சமுத்திரத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு வழங்கியது வரவேற்கத்தக்கது. இலங்கையில்பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு விடுதலைப் புலிகளோடு சேர்ந்துநாம் போராடுவோம் என்றார்.
திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் பேசுகையில்,
தமிழில் பேசவே வெட்கப்படுகின்றனர். எனது தாய்மொழியான தமிழை எனது பிள்ளைக்கு கற்றுக் கொடுக்கஇயலாத நிலை உள்ளது. ஒரு குழந்தை தமிழில் பேசினால் அந்தக் குழந்தையுடன் மற்ற குழந்தைகள் சேர்வதில்லை.
தமிழ் பேசினால் சமூக குற்றவாளியாக சித்தரிக்கப்படுகின்றனர். தமிழர் நலம் பற்றிப் பேசுபவர்கள்தண்டிக்கப்பட்டவர்களாகிறார்கள். இத்தகை அடக்குமுறை தொடர்ந்தால் அதை வெல்ல வேண்டும் என்றார்.
மாநாட்டில் காசி ஆனந்தன், வைகோ, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் ஆகியோரது புத்தகங்களும், பேச்சுகள்அடங்கிய கேசட்களும் பரபரப்பாக விற்பனையானது. மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை, பிரான்ஸ்,ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர்.
மாநாடு தொடங்கியது முதல் முடியும் வரை பெங்களூர் தமிழ்ச் சங்க வளாகம் தமிழ் ஆர்வலர்களின் கூட்டத்தால்நிரம்பி வழிந்தது. அரங்கினுள் உட்கார இடமில்லாமல் பலர் வெளியே நின்றிருந்தவாறு தமிழ் அறிஞர்களின்பேச்சைக் கேட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications