கும்பகோணம்: செருப்பு துடைத்து நிதி வசூல்!
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நூற்பாலை தொழிலாளர் ஒருவர் கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவுவதற்காகவும், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோருக்குஉதவுவதற்காகவும் பொது மக்களின் செருப்புகளை துடைத்து நிதி வசூல் செய்கிறார்.
விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த சார்லஸ், தனியார் நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். கும்பகோணம் தீ விபத்தில் இறந்தகுடும்பங்களுக்கு உதவ நினைத்த அவர், தன்னால் இயன்ற பண உதவியோடு, கூடவே நிதி வசூல் செய்யவும் திட்டமிட்டார்.
தினமும் பொது மக்களின் செருப்புகள், ஷூக்களைத் துடைத்து பணம் வசூலிக்கிறார். இதேபோல, பஸ்களில்பயணிப்போரிடமும், வாகனங்களில் செல்வோரை நிறுத்தியும் செருப்புக்களைத் துடைத்து நிதி வசூல் செய்கிறார்.
சார்லஸின் தன்னலமற்ற செயலால் கவரப்படும் பலரும் ஆர்வத்துடன் அவரிடம் பணம் கொடுக்கின்றனர். பெரும்பாலானவர்கள்அவரை தங்களது செருப்பைத் தொட விடாமல் தடுத்துவிட்டு பணம் தருகின்றனர். ஆனாலும், அதை வாங்க மறுக்கும் சார்லஸ்இந்த சின்ன வேலையை செய்த பிறகு பணம் கொடுத்தால் போதும் என்கிறார்.
வசூல் செய்யும் பணத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்து அவர் மூலம்கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவப் போவதாக சார்லஸ் கூறுகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications