வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
சென்னை:
காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராகநிறைவேற்றிய தீர்மானங்களை திரும்பப் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கடும்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரத்தை வழங்கிய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஉடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் சென்னைஉயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களின் சங்க நிர்வாகிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் அழைத்துபோராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
தலைமை நீதிபதிக்கு எதிரான கருத்துக்கள், தீர்மானங்களை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுபணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அப்படிப் பணிக்குத் திரும்பாவிட்டால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நடத்தி வரும்வழக்குகளில் வழக்குகளின் தன்மைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
நீதிபதிகளின் எச்சரிக்கை குறித்து இன்று கூடும் அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பிரபாகரன், தனது வழக்கமான கோபாவேசத்துடன் பேசாமல்,அடங்கி-ஒடுங்கிப் பேசினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications