விரட்டப்பட்ட வெளியூர் வழக்கறிஞர்கள்
கும்பகோணம்:-
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்து தொடர்பாக கைதானவர்களுக்கு ஆதரவாக வெளியூர் வழக்கறிஞர்கள் ஆஜராவதற்குஎதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ளூர் வழக்கறிஞர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணா பள்ளி விபத்து தொடர்பாகக் கைதாகியுள்ள பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஆதரவாகயாரும் ஆஜராவதில்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் தீர்மானம் போட்டுள்ளனர். வெளியூர் வழக்கறிஞர்களையும்அனுமதிப்பதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் கைதாகியுள்ள கல்வித்துறை அதிகாரிகளான பாலாஜி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் கும்பகோணம் தலைமைகுற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது 9 பேருக்கு ஆதரவாக மதுரை மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள்ஆஜராக வந்தனர்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த கும்பகோணம் வழக்கறிஞர்கள், இருவரையும் சூழ்ந்து கொண்டு ஆஜராகக் கூடாது என்றுசொல்லி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேரம் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து வெளியூர் வழக்கறிஞர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications