பொது மக்களின் மனுக்களுக்கு 90 நாளில் தீர்வு: ஜெ
சென்னை:
பொது மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 90 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சட்டசபையில் அவர் பேசுகையில், அரசு நிர்வாகம் தாமதமின்றி செயல்படுவது மிக, மிக அவசியம். வெளிப்படையான,திறமையான, நேர்மையான நிர்வாகத்தை அளிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.
பொது மக்களிடம் இருந்து தங்களுக்கு வரும் மனுக்களுக்கு 5 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்கள் அக்னாலெட்ஜ்மெண்ட்டைஅனுப்ப வேண்டும். அடுத்த 85 நாட்களுக்குள் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
சத்துணவுக்கு இனி எவர் சில்வர் தட்டு:
சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி பேசுகையில்,
தமிழகத்தில் இப்போது பள்ளிகளில் சத்துணவு ஈய தட்டுக்களில் வழங்கப்பட்டு வருகிறது. இனி எவர்சில்வர் தட்டுக்களில் உணவுவழங்கப்படும். இதற்காக ரூ. 1 கோடி செலவில் புதிய தட்டுக்கள், டம்ளர்கள் வாங்கப்படும்.
பார்வையற்றோருக்காக தேர்வெழுதும் உதவியாளர்களுக்கு ஒரு தேர்வுக்கு இதுவரை ரூ. 30 வழங்கப்படுகிறது. இதை ரூ. 50 ஆகஉயர்த்த முடிவு செய்துள்ளோம்.
ரூ. 2,890 கோடி கடன் கோரிக்கை:
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழகத்தின் நீர் வள ஆதார மேம்பாட்டுக்காக ரூ. 2,890 கோடிகடன் வழங்குமாறு உலக வங்கியிடம் கோரப்பட்டுள்ளது.
திருச்சியில் பெண்கள் சிறையை விரிவுபடுத்த ரூ. 9.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இலவச திருமணங்கள்:
அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி கூறுகையில், கடந்த ஆண்டு இந்து அறநிலையத்துறை மூலம் 53 ஜோடிகளுக்கு முதல்வர்ஜெயலலிதா இலவச திருமணங்கள் செய்து வைத்தார். அதே போல இந்த ஆண்டும் இலவச திருமணங்களுக்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டு வருகின்றன.
தலித்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நிதியில்லாமல் கும்பாபிஷேகம் நடத்த முடியாத நிலையில் உள்ளகோவில்களுக்கு அரசு தலா ரூ. 25,000 ஒதுக்கும். மேலும் தமிழகத்தில் உள்ள சுமார் 6,000 கோவில்களிலும் திருப்பணிகள் செய்யஅரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ரேசன் கடை முறைகேடுகள்:
நிதியமைச்சர் பொன்னையன் பேசுகையில், ரேசன் கடை ஊழியர்கள் அரசியல் உள்நோக்கத்தோடு தவறாக நடந்து கொண்டால்கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரேசன் கடைகளில் குறிப்பிட்ட நாளில் தான் இந்தந்த பொருட்களை வழங்க வேண்டும் எனஅரசு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
இதனால் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை எப்போது வேண்டுமானாலும் பொது மக்கள் பெறலாம் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications