சென்னையில் அரசு காரை தவிர்த்த சிதம்பரம்
சென்னை:
சென்னை வந்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் அரசு காரை தவிர்த்துவிட்டு, வழக்கம்போல் தனது சொந்த காரில் ஏறிச் சென்றார்.இனிமேல் சென்னையில் தனக்கு அரசு காரை ஒதுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மத்தியில் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடந்த 20 ஆண்டுகளாகவே சென்னையில் அவர் அரசு காரைபயன்படுத்துவதை தவிர்த்தே வருகிறார். அமைச்சர் பதவியில் இல்லாத நேரத்தில், டெல்லி, சென்னையில் தனது காரை தானேஓட்டிக் கொள்வார் சிதம்பரம்.
இப்போது மீண்டும் நிதியமைச்சராகிவிட்ட நிலையில், சென்னை வந்த அவரை அழைத்துச் செல்ல அரசு கார் வந்து நின்றது.முன்னும் பின்னும் செல்ல சைரன் பொருத்திய வாகனங்களும் வந்தன. அவற்றை அப்படியே திருப்பி அனுப்பிய சிதம்பரம்,வீட்டிலிருந்து வந்திருந்த தனது சொந்த காரில் புறப்பட்டுச் சென்றார்.
எப்போதும் போலவே எனது காரை பயன்படுத்திக் கொள்வேன் என்று கூறிவிட்ட சிதம்பரம், இனி மேல் இந்த வாகனங்களைதனக்காக ஒதுக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே குளோபஸ் டிரஸ்ட் வங்கிசரிந்து கொண்டு வந்தது. அப்போதைய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தச் சரிவை தடுத்திருக்கமுடியும்.
நிலைமை மேலும் மோசமாகும் முன்பு ரிசர்வ் வங்கி தலையிட்டு முதலீட்டாளர்களின் பணத்தைக் காத்துள்ளது.
வங்கி முடக்கப்பட்டபோதே, ரூ. 10,000 கட்டுப்பாடு தவிர, கல்வி, திருமணம், மருத்துவ செலவுகளுக்காக ரூ. 1 லட்சம் வரைஎடுத்துக் கொள்ளலாம் என முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ரூ. 10,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாடும்இன்னும் ஓரிரு தினங்களில் தளர்த்தப்பட்டு விடும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications