தமிழக அரசைக் கலைக்க எதிர்க்கட்சிகள் சதி: பாஜக
சென்னை:
கொலை, கொள்ளைச் சம்பவங்களை வைத்து தமிழக அரசை கலைக்க எதிர்க் கட்சிகள் நினைப்பதாகவும், அது ஜனநாயகப் படுகொலையாக அமையும் என்றும் தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தனிப்பட்ட முறையில் நடக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்களை வைத்து தமிழக அரசைக் கலைக்க எதிர்க் கட்சிகள் நினைப்பது ஜனநாயகப் படுகொலையாக அமையும்.
அப்படி செய்யப்படுமானால், எதிர் காலத்தில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களின் கையில் மாநில அரசுகள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக கூறி ஆளுநரை சந்தித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் புகார் மனு கொடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஆளுநர் ராம் மோகன் ராவ் மீது நம்பிக்கை இல்லை, செயல்படாத ஆளுநர் என்று திமுகவினர் முன்பு கூறினார்கள்.
இப்போது மட்டும் அவர் மீது எப்படி நம்பிக்கை வந்துள்ளது என்பது தெரியவில்லை. மேட்டூர் அணையிலிருந்து ஓரளவாவது தண்ணீரைத் திறந்து விட்டு காவிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.
நிலத்தை சுருட்டினாரா வெங்கையா?
இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் முறைகேடான வழியில் நிலம் வாங்கியதாக பாஜக தலைவர் வெங்கையா நாயுடு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1978 ஆம் ஆண்டு நிலம் இல்லாத ஏழை என்ற அடிப்படையில் வெங்கையா நாயுடுவுக்கு நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான காசுமுரா கிராமத்தில் 8.23 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் உதயகிரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
தலித் மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிலத்தை முறைகேடாக வெங்கையா நாயுடு வாங்கி விட்டார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியதை அடுத்து 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலத்தை அவர் அரசிடம் ஒப்படைத்தார். இந் நிலையில் இது குறித்து விசாரணை நடத்த உத்தர விடவேண்டும் என்றும், வெங்கையா நாயுடுவைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. அனுமந்த ராவ், ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர ரெட்டி, வெங்கையா நாயுடு மீது கூறப்பட்டுள்ள புகார் மீது விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்படும் என்று தெரிவித்தார்.
ராமதாஸ் கோரிக்கை:
இந் நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது பண்ணை வீட்டில் நிருபர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,
தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமை படுமோசமாக உள்ளது. தொடர் கொள்ளைகள் நடந்து கொண்டுள்ளன. இதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபைக் கூட்டத் தொடரை 7 நிாட்கள் மட்டுமே நடத்துவது என்ற தமிழக அரசின் செயல் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிப்பதற்கு சமம்.
புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் ரூ. 1,000 கோடி செலவில் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து கிராம மக்களின் நிலத்தடி நீரை திருடி வருகிறது தமிழக அரசு. இதை கடலூர் மாவட்ட மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றார்.
-
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி












Click it and Unblock the Notifications