மதுரை நீதிமன்றத்துக்கு மனித குண்டு மிரட்டல்
பெரியகுளம் & சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை மனித வெடிகுண்டால் தகர்க்கப்படும் என மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடம் மாற்றம் செய்யக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும், மதுரை கிளைக்கு அதிக மாவட்டங்களை ஒதுக்கக் கூடாது, ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் வழங்கக் கூடாது, உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை வற்புறுத்தி இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் தொடங்கியுள்ளனர்.
இக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும், சுபாஷன் ரெட்டி ஆஜராகும் வழக்குகளின் விசாரணையை புறக்கணிப்போம் என வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருவதால் வழக்கு விசாரணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு பொது மக்கள் பெரும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்:
இந் நிலையில் பெரியகுளத்தில் உள்ள விரைவு நீதிமன்ற நீதிபதி தேவகிக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், இன்றும் நாளையும் விரைவு நீதிமன்றத்தை தற்கொலைப் படையினர் குண்டு வைத்து தகர்ப்பார்கள். அதே போல நெல்லை நீதிமன்றமும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையும் மனித வெடிகுண்டால் தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications