மனசாட்சி இல்லாத பள்ளிகள்: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

மனசாட்சியே இல்லாமல் பலர் தமிழகத்தில் பள்ளிகள் நடத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.

கும்பகோணம் சென்ற சிதம்பரம் தீ விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளியை பார்வையிட்டார். பின்னர் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனசாட்சியே இல்லாமல் பலர் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளியாகத்தான் கிருஷ்ணா பள்ளி இருந்துள்ளது.

ஆசிரியர்களை நம்பித்தான் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளிகளை கண்காணிப்பு செய்யும் பணிகளை செய்யக் கூடியவர்கள், கண்காணிப்பது போல நடிக்கிறார்கள்.

அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக செய்திருந்தால் இந்த கோர விபத்து நடந்திருக்காது. திருச்சி கல்யாண மண்டப விபத்துக்குப் பிறகு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என்றார் ப.சிதம்பரம்.

பின்னர் 13 குழந்தைகளைப் பறிகொடுத்த நத்தம் கிராமத்திற்கு சென்ற சிதம்பரம் குழந்கைளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+