அன்புமணியை தவிக்க விடும் தமிழக அரசு
சென்னை:
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ராவை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தனது தனிச் செயலாளராக சென்னை கோட்டையில் பணியாற்றிவரும் அதுல்யாமிஸ்ராவை நியமித்துக் கொள்ள விரும்பினார். இதனையடுத்து மிஸ்ரா டெபுடேஷனில் மத்திய அரசுப் பணியில் பொறுப்பேற்றார்.
அவரை நிரந்தரமாக மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மிஸ்ராவைவிடுவிக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மிஸ்ரா விவகாரம் மத்திய மாநில அரசுகளுக்குஇடையேயான விரிசலை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி:
இந் நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியையும், நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50இடங்களையும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியுள்ளது.
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது. பின்னர்திமுக, பா.ம.க., மதிமுக ஆகியவையும் மாநில அரசும், மத்திய அரசை வலியுறுத்தின. இதையடுத்து அகில இந்தியக் கவுன்சில் இரண்டாவதுமுறையாக இந்தக் கல்லூரிகளை ஆய்வு செய்தது.
அதன் பிறகு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications