இலங்கை மீனவர்கள் தாக்குதலில் ஒருவர் காயம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கடலில் மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பயங்கரத் தாக்குதல் நடத்தினர். இதில் ராமேஸ்வரம்மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இலங்கை கடல் பகுதிக்குள், தமிழக மீனவர்களும், தமிழக கடல் பகுதிக்குள் இலங்கை மீனவர்களும் வரக் கூடாது என்று இரு தரப்புமீனவர்களும் சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். ஆனால் இந்த ஒப்பந்தம் சரியான முறையில்அமல்படுத்தப்படவில்லை.

இரு தரப்பினருமே எல்லை தாண்டி செல்கின்றனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் புதன்கிழமை காலை 500 படகுகளில் மீன் பிடிக்கச்சென்றனர். சர்வதேச எல்லையைத் தாண்டி இலங்கை பகுதிக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து நான்கு இயந்திரப் படகுகளில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி ராமேஸ்வரம் மீனவர்களைநிலைகுலையச் செய்தனர். பின்னர் பயங்கர ஆயுதங்களாால் தாக்கினர்.

இதில் சுப்ரமணி என்பவர் படுகாயமடைந்தார். ராமேஸ்வரம் மீனவர்களைக் கடுமையாக தாக்கி, எச்சரித்த பின்னர் இலங்கை மீனவர்கள்அங்கிருந்து சென்று விட்டனர். தாக்குதல் சம்பவத்திற்குப் பின் கரை திரும்பிய தமிழக மீனவர்கள் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர்.

படுகாயமடைந்த மீனவர் சுப்ரமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+