எதிர்க் கட்சிகளால் தமிழகத்துக்கு அவமானம்: ஜெ
சென்னை:
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்க்காமல் விட்டதற்கு மத்திய அரசைமுதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஆவேசகடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
கடந்த 27ம் தேதி மத்திய கேபினட் செயலாளர் வறட்சி பாதித்த மாநிலங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தைநடத்தியதாக பத்திரிக்கைகளில் படித்துத் தெரிந்து கொண்டேன். அந்த 9மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை.
கடந்த 2001ம் ஆண்டு முதல் பருவ மழை பொய்த்து ஒட்டு மொத்த தமிழகமே வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துவருகிறது. செனனை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் கடந்த ஆண்டே வறண்டுவிட்டன.
இது குறித்து மத்திய அரசிடம் பல முறை மனு அளிக்கப்பட்டு, வறட்சி நிவாரணமாக ரூ. 584 கோடியும், 10.8லட்சம் டன் அரிசியும் கேட்டோம். இதில் ரூ. 292 கோடியையும் 3.04 லட்சம் டன் அரிசியையும் மட்டுமே மத்தியஅரசு வழங்கியது.
கூடுதலாக ஆகும் செலவை மாநில அரசு ஏற்றுள்ளது. இதனால் அரசு பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.இதே போன்ற வறட்சி தான் ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்திலும் நிலவுகிறது.
ஆனால், அந்த மாநிலங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு தமிழகத்தை மட்டும் அழைக்கவில்லை.
தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சரவையில் இருந்தும் கூட தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்செய்வதை தடுக்கவில்லை. இதை நினைத்தால் அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் வறட்சியைச் சொல்லியும், விவசாயிகள் நலன் பற்றியும் கூக் குரல் இட்டவர்கள்இவர்கள். ஆனால், மத்திய அரசு உதவியைப் பெற்றுத் தர தவறிவிட்டார்கள்.
இவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் இந்த நாடகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். ஒன்றைச் சொல்வது,இன்னொன்றைச் செய்வது இவர்களது வழக்கம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications