கொல்லூரில் ஜெயலலிதா, சசிகலா வழிபாடு
மங்களூர்:
முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் தரிசனம்செய்தனர்.
சமீபத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்துக்கும், கேரள மாநிலம் சென்று குருவாயூரப்பன் ஆலயத்துக்கும் சென்று சிறப்புப் பூஜைகள்செய்த ஜெயலலிதா, இன்று கொல்லூர் மூகாம்பிகை அம்மனைத் தரிசித்தார்.
சென்னையிலிருந்து இன்று காலை 5.45 மணக்கு சிறப்பு விமானத்தில் மங்களூர் சென்ற ஜெயலலிதாவும் சசிகலாவும் அங்கிருந்துஹெலிகாப்டரில் அரேசூர் என்ற இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்து கார் மூலம் கொல்லூர் சென்றனர்.
கோவிலில் அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதைகள் அளிக்கப்பட்டன. அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையான இன்று ஜெயலலிதாவின்சார்பில் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேலும் சண்டி ஹோமத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹோமத்துக்காக ஒரு டின் நெய்யை வழங்கிய ஜெயலலிதா, கோவில்அன்னதானத்துக்கு ரூ. 30,000 செலுத்தினார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.இந்த ஆலயத்துக்கு வழங்கிய தங்க வாளுடன் அம்மன் காட்சியளித்தார்.
கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த ஜெயலலிதா, அங்கிருந்தபடியே தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷிடம் பேசினார். அப்போது,சென்னை, கோவை. செலத்தில் இருந்து தினமும் கொல்லூருக்கு பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவின் வருகையின்போது நிருபர்களோ, போட்டோகிராபர்களோ கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவரதுபயணத்தையொட்டி கொல்லூரில் கடந்த மூன்று நாட்களாக 150 தமிழக போலீசாரும், கறுப்புப் பூனைப் படையினரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு மங்களூர் வழியாக பிற்பகலில் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் இந்தக் கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications