அழகர் கோவிலில் பக்தர்கள், அதிகாரிகள் மோதல்
மதுரை:
மதுரை அழகர் கோவில் ஆடித் தேரோட்ட விழாவில் பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே தகராறுமூண்டது.
அழகர் கோவிலில் ஆடித் தேரோட்ட விழா இன்று காலை நடந்தது. தேரோட்டத்திற்குப் பின் பக்தர்கள் 18ம் படிகருப்பண்ண சுவாமிக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.
இதற்காக பக்தர்கள் சந்தனக் குடங்களுடன் 18ம் படி கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு வந்தபோது, இந்துஅறநிலையத்துறை அதிகாரிகள் குறுக்கிட்டு, ஒவ்வொரு குடத்திற்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும் என்றுகட்டாயப்படுத்தினர்.
இதனால் அதிருப்தி அடைந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறினர். இதையடுத்து கோவிலின் கதவைஅறநிலையத்துறை அதிகாரிகள் இழுத்து மூடினர்.
அதிகாரிகளின் இந்தச் செயலால் கடும் ஆத்திரமடைந்த பக்தர்கள் சந்தனக் குடங்களை கோவில் முன் வைத்துவிட்டு மறியல் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 3 மணி நேர இழுபறிக்குப் பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோவிலை திறக்கவைத்தனர். அதன் பின்னர் மறியல் போராட்டத்தைக் கைவிட்ட பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications