7 இடங்களில் குண்டு மிரட்டல்: ஈரோட்டில் பதற்றம்
ஈரோடு:
தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப. இளவரசனை விடுதலை செய்யாவிட்டால் ஈரோடு நீதிமன்றம், ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என வந்த தகவலால் ஈரோடுமுழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழர் விடுதலைப் படைத் தலைவரான சுப. இளவரசன் தமிழக அதிரடிப்படை போலீஸாரால் சில மாதங்களுக்குன்பு கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில், ஈரோடு ரயில் நிலைய மேலாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், சுப. இளவரசனைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரயில் நிலையம், நீதிமன்றம், தலைமை மருத்துவமனைஉள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஈரோடு நகர் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். குண்டு தேடும் வேலையில் நிபுணர்களும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் பகுதியில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசியவழக்கில், சுப. இளவரசன் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்தமாதம் 12ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.--
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications