மாஜி உள்துறைச் செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை:
முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா மற்றும் உள்துறை இணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியஇருவரையும் தமிழக அரசு திடீரென்று தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
உள்துறைச் செயலாளராக இருந்து வந்த சையத் முனீர் ஹோதா சமீபத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுகாத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் டிஐஜி முகம்மது அலி,உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர் ஹோதா மாற்றப்பட்டார்.
இந் நிலையில் தற்போது அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருடன்சேர்த்து கிருபாகரனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள கேரள அரசியல்வாதி அப்துல் நாசர் மதானிக்குஆதரவாக செயல்பட்டதற்காக ஹோதாவும், அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக கிருபாகரனும் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தரப்பில் கூறுகையில், ஹோதா மற்றும் கிருபாகரன் ஆகியோரது நடவடிக்கைகள் குறித்துவிசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் உத்தரவிட்டார்.
செயற்கைக் கால் மாற்றுவதற்காக தன்னை சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு செயற்கைக் கால் மாற்றுமையத்தில் அனுமதிக்கக் கோரி மதானி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இதைஎதிர்த்து தமிழக அரசின் சார்பில் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி முன்ஸினி பதில் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில் மதானிக்கு ஆதரவாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
ஹோதா மற்றும் கிருபாகரன் ஆகியோரது தலையீடு மற்றும் வலியுறுத்தல் காரணமாகவே இந்த மாற்றங்கள்சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அரசிடம் கேட்காமலேயே, மதானியை மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்றுஅந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோதாதான் இதற்கு முழுக் காரணம்.
இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி மதானிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இருப்பினும் மதானிமருத்துவமனையில் சேர ஆர்வம் காட்டவில்லை, மாறாக ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவைஉயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந் நிலையில், கடந்த ஜூன் 18ம் தேதி முனீர் ஹோதா தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.அதாவது, கோவை மத்திய சிறைக்குள் மட்டுமே மதானி இருக்க வேண்டும், வேறு எங்கும் வைக்கப்படக் கூடாதுஎன்ற முந்தைய அரசு உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை ஹோதா பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு குறித்தும் முதல்வரிடம் அவர் ஆலோசிக்கவில்லை என்று தெரிகிறது. தன்னிச்சையாக உத்தரவுபிறப்பித்துள்ளார். இதன் மூலம் மதானியை சென்னைக்குக் கொண்டு வருவதற்கும் அவர் முயற்சித்துள்ளது தெரியவந்தது.
ஹோதாவின் உத்தரவை நிறுத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா மதானி விவகாரம் தொடர்பாக முழுமையானவிசாரணைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஹோதாவின் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகவே அவரைபணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மதானி தவிர, போலி முத்திரைத் தாள் விவகார வழக்குகள் குறித்தும் ஜெயலலிதாவுக்கு ஹோதா சரியானதகவலைத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. போலி முத்திரைத் தாள் விவகாரம் இவ்வளவு பெரிய பூகம்பமாகவெடிக்கும் என்று முதல்வருக்கு எச்சரிக்காத ஹோதா, முகம்மது அலி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் குறித்தவிவரத்தையும் ஜெயலலிதாவிடம் சரியாக தெரிவிக்கத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்று ஹோதா,ஜெயலலிதாவுக்கு எடுத்துக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த முத்திரைத் தாள் விவகாரத்தில் ஹோதாவுக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகம்கிளம்பியுள்ளது.
இந் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரையும் சிபிஐ விசாரிக்க வாய்ப்புள்ளதாகத்தெரிகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications