சாகும்வரை உண்ணாவிரதம் வாபஸ்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தங்களது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக்கைவிட்டுள்ளனர்.
தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை இடமாற்றம் செய்ய வேண்டும், மதுரை கிளைக்கு ரிட் அதிகாரம் வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொண்டிருந்தனர்.
இவர்களுக்குப் போட்டியாக, தலைமை நீதிபதிக்கு ஆதரவாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்களும்உண்ணாவிரதத்தில் குதித்தனர்.
இந் நிலையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் 23 பேர் கொண்ட குழு, நேற்று நீதிபதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தியது. அப்போது சுபாஷன் ரெட்டிக்கு எதிரான நிலையையும், தீர்மானங்களையும் கைவிட்டால், சிலசலுகைகளை வழங்குவதாக நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, ஜூலை 23ம் தேதி வரை (மதுரை கிளை திறக்கப்படுவதற்கு முதல் நாள்) தாக்கலான அனைத்து ரிட்மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படும். சுபாஷன் ரெட்டி முன்னிலையில்விசாரிக்கப்பட்டு வரும் மதுரை கிளைக்கு எதிரான வழக்கும் வேறு பெஞ்சுக்கு மாற்றப்படும்.
மதுரை கிளைக்கான மாவட்டப் பகிர்வு தொடர்பாக ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் 9 நீதிபதிகள் குழுவின் அறிக்கையைவெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட பகிர்வு குறித்து தீர்மானமான முடிவு எடுக்கப்படும் வரை மதுரைகிளையில் வழக்குகள் பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படும் என்பது போன்ற சலுகைகளை நீதிபதிகள்தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கூடிய வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுவில், போராட்டத்தை வாபஸ் பெறுவது என்றும்,திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சுபாஷன் ரெட்டியை புறக்கணிப்பது என்ற முடிவில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications