புதிய கடற்படை தளபதி அருண் பிரகாஷ்
டெல்லி:
இந்தியாவுக்கு அணு சக்தி நீர் மூழ்கிகள் மிக அவசியம் என புதிய கடற்படைத் தளபதியாகப்பொறுப்பேற்றுள்ள அருண் பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடற்படைத் தளபதியாக இருந்த மானவேந்திர சிங் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாட்டின் 20வதுகடற்படைத் தலைவராக அருண் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படையின் போர் விமான பைலட்டாக இருந்து, இப்போது தளபதியாகியுள்ள அருண், 1971ம்ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் சிறப்பாக பணியாற்றியதற்காக வீர் சக்ரா விருதும்பெற்றவராவார்.
பதவியேற்ற பின் பேசிய அவர்,
நமக்கு அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிகள் மிக, மிக அவசியம். ஆனால், இது குறித்த முடிவைஎடுக்க வேண்டியது அரசு தான். கடற்படையின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதைஉடனடியாகத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
இப்போதுள்ள போர்க் கப்பல்கள், நீர் மூழ்கிகளை முறையாகப் பராமரிப்பதற்கு முக்கியத்துவம்கொடுப்பேன். அதே நேரத்தில் புதிய போர்க் கப்பல்களை படையில் சேர்க்கவும், நீர் மூழ்கிகளைஇறக்குமதி செய்யவும் முயற்சி எடுப்பேன்.
கருவிகளுக்கும் ஆட்களுக்கும் கடற்படையில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைப் போக்க உரியமுயற்சி எடுப்பேன்.
நாட்டின் பல பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நீண்ட தூரம் சென்று தாக்கும்ஏவுகணைகள், ரேடார்கள், சென்சார்களுடன் கடற்படைக் கப்பல்களை நெட்வோர்க் செய்யநடவடிக்கை எடுப்பேன். செயற்கைக் கோள்கள் உதவியுடன் இந்த நவீன கம்ப்யூட்டர் நெட்வோர்க்உருவாக்கப்படும்.
இதன்மூலம் கடற்படையின் தாக்குதல் திறன் பல மடங்கு அதிகரிக்கப்படும். அதே நேரத்தில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் கப்பல்கள், நவீன நீர்மூழ்கிகள், கண்காணிப்புப் படகுகள் ஆகியவையும்அதிக அளவில் வாங்கப்பட வேண்டும்.
விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கிராஸ்க்காவ் விரைவில் ரஷ்யாவிலிருந்து இந்தியகடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
பதவியேற்புக்கு முன்னதாக, அமர்ஜவான் ஜோதிக்குச் சென்று போரில் வீர மரணம் அடைந்தவீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அருணுக்கு முப்படைகளின்அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கடற்படையின் கிழக்கு மண்டலப் பிரிவின் தலைவராகவும், அந்தமான்-நிகோபார் தீவுகளின்கடற்படைப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ள அருண், மேற்கு மண்டல கடற்படையின்கமாண்டராகவும் இருந்தவராவார்.
ரஷ்யாவிடம் இருந்து இரு அகுலா ரக அணு நீர் மூழ்கிகளை வாங்கவும், பிரான்சிடம் இருந்துஸ்கார்பீன் ரக ஹண்டர் நீர்மூழ்கிகளை வாங்கவும் இந்தியா பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications