7 நாள் சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தது
சென்னை:
ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பையும் மீறி நடந்த தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்நேற்றுடன் முடிவடைந்தது.
தமிழக சட்டசபையின் குறுகிய கால கூட்டத் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கியது. மொத்தம் 10 நாட்கள்மட்டுமே கொண்ட தொடரில் இரண்டு நாட்கள் விடுமுறை போக வெறும் 8 நாட்கள் மட்டுமே கூட்டம் நடந்தது.
குறுகிய காலமே கூட்டத் தொடரை நடத்த தமிழக அரசு முடிவு செய்ததால் கோபமடந்த திமுக, காங்கிரஸ், பாமக,மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத் தொடரை புறக்கணித்தன.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சட்டசபைக் கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. 8 நாள் கூட்டத்தில் 60க்கும்மேற்பட்ட மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. கடைசி நாளான நேற்று மட்டும் 23 மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மொத்தம் 24 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் சபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.இவற்றில் பெரும்பாலான தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பதிலுரை கூட இல்லாமல்நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத் தொடரில் தமிழ்நாடு உடல் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கானமசோதா உள்ளிட்ட 49 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆடு, கோழி பலி தடை சட்ட நீக்க மசோதாவும்இதில் முக்கியமான ஒன்று.
49 மசோதாக்களில் 36 மசோதாக்கள் விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்டன. 13 மசோதாக்கள் விவாதமின்றிநிறைவேற்றப்பட்டன.
சட்டசபைக் கூட்டம் என்றாலே ஆக்ரோஷமான வாக்குவாதங்கள், வெளிநடப்புகள், அமளி, துமளி என்றுஇருக்கும் நிலை மாறி இந்த கூட்டம் மட்டும்தான் மிகவும் அமைதியாக, வாக்குவாதமே இல்லாமல் நடந்துமுடிந்தது. இதற்கு முக்கியக் காரணம் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தவிர எதிர்க்கட்சிகள் தரப்பில் பாஜக, இந்திய குடியரசுக் கட்சி மற்றும் அகில இந்தியபார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மட்டுமே சபையில் கலந்து கொண்டு விவாதங்களில்பங்கேற்றனர்.
எதிர்க்கட்சிகள் இல்லாமலேயே சபை நடந்து முடிந்தது குறித்து கடைசி நாளான நேற்று செய்தியாளர்களிடம்நிதியமைச்சரும், அவை முன்னவருமான பொன்னையன் கூறுகையில், எதிர்க்கட்சிகளே இல்லை என்று யார்சொன்னது? மத்தியில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இப்போது பாஜக தான் உள்ளது. அதேபோல, தமிழகசட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக, பொறுப்பான முறையில் பாஜக இக்கூட்டத் தொடரில் கலந்துகொண்டது.
இதேபோல, இந்தியக் குடியரசுக் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் பொறுப்பானமுறையில் கலந்து காண்டு விவாதங்களிலும் பங்கேற்றனர் என்றார் பொன்னையன்.
இந்த கூட்டத் தொடரில் இன்னொரு முக்கிய அம்சம்: சட்டசபைக் கூட்டத் தொடரில் தவறாமல் கலந்து கொள்ளும்முதல்வர் ஜெயலலிதா இந்த கூட்டத் தொடரின் சில நாட்கள் சபைக்கு வரவில்லை.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications