மீண்டும், குழந்தைகளை புதைத்து நேர்த்திக் கடன் !
சிவகாசி:
தமிழக அரசின் தடையையும் மீறி, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே கோட்டைப்பட்டிகிராமத்தில் குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாகநடந்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை அருகே பேரையூர் கிராமத்தில், கோவில் திருவிழாவில் அமைச்சர் துரைராஜ்முன்னிலையில், குழந்தைகளை உயிருடன் புதைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை காரணமாக அமைச்சர் பதவியை பறிகொடுத்தார் துரைராஜ். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துகுழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்தது.
இந் நிலையில், விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் நடந்த முத்தாளம்மன் கோவில் திருவிழாவில்,குழந்தைகளை உயிருடன் புதைத்து நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முத்தாளம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தஆண்டு விழாவில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களிலும் குழந்தைகளை மண்ணில் புதைத்து பக்தர்கள்நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.
கோவில் முன்பு ஆறு அடி ஆழத்திற்கு நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதில் வேப்பிலைகள் போடப்பட்டன.குழிக்குள் புதைக்கப்பட வேண்டிய குழந்தைகளை மஞ்சள் துணியால் சுற்றி அக்குழந்தைகளை குழிக்குள்பெற்றோர் வைத்தனர். பின்னர் குழி மூடப்பட்டது.
இதையடுத்து கோவில் பூசாரி, மண்ணால் ஆன அம்மன் சிலையுடன் குழியின் மீது நடந்து சென்றார். அதைத்தொடர்ந்து குழி திறக்கப்பட்டு குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக எந்த விபரீதமும்நடைபெறவில்லை.
இந்த சம்பவம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது, அந்த சமயத்தில் தான் விடுப்பில் சென்றிருந்ததாக மாவட்டஆட்சித் தலைவர் முகம்மது அஸ்லம் தெரிவித்துள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications