அரசு ஊழியர்களுக்கு மேலும் புதிய சலுகைகள்
சென்னை:
மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றமுதல்வர் ஜெயலலிதா, இப்போது அவர்களுக்கு பல புதிய சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக இன்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
2001ம் ஆண்டு மே மாதம் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, முந்தைய திமுக அரசு மிகவும் கடுமையான நிதிநெருக்கடியை ஏற்படுத்திச் சென்றிருந்தது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலை இருந்தது. கடந்த 3ஆண்டுகளாக எனது தலைமையிலான அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிதி நெருக்கடியைதீர்த்தது.
இதனால் தான் அரசு ஊழியர்கள் தங்களது மாதச் சம்பளம், மற்றும் அலவன்சுகளை தங்கு தடையின்றி பெற்றுவருகின்றனர். இந் நிலையில் திமுக அரசால் வழங்க முடியாமல் போன நிலுவைத் தொகைகளையும் ஊழியர்களுக்குவழங்க புதிய திட்டம் ஒன்றை எனது அரசு அமல்படுத்த உள்ளது.
இத் திட்டத்தின் படி,
1996ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 1998 ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசுஊழியர்கள் தங்களது பணிக் கொடை (ரிடையர்மென்ட் பெனிபிட்) நிலுவைத் தொகையை 3 சம தவணைகளில்வட்டியுடன் பெற்றுக் கொள்ளலாம். 2004-2005ம் நிதி ஆண்டில் இருந்து இந்த பாக்கியைப் பெறலாம்.
மேலும் இவர்களுக்கான தொகுப்பூதியமும் 3 சம தவணைகளில் வட்டியுடன் வழங்கப்படும்.
1996ம் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு2003ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை 60 சதவீத நிலுவைத் தொகை வட்டியுடன் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.மீதமுள்ள நிலுவைத் தொகை 3 தவணைகளாக சிறுசேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படும்.
இப்போது பணியில் இருப்பவர்களின் அலவன்சுகளின் நிலுவைத் தொகையில் 60 சதவீதம், டெபாசிட் கணக்கில்வட்டி இல்லாமல் வைக்கப்படும். ஓய்வு பெறும் போது அந்த தொகை 3 சம தவணைகளாக பிரித்து சிறுசேமிப்புபத்திரங்களாகக் கொடுக்கப்படும்.
அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 சதவீத நிலுவை தொகை 20 சதவீதமாகக்குறைக்கப்பட்டது. அதுவும் ரத்து செய்யப்படுகிறது.
இதுவரை அரசு ஊழியர்கள் 240 நாட்கள் வரை ஈட்டு விடுமுறையை (earned leave) வைத்துக் கொள்ள அனுமதிஇருந்தது. இப்போது அது மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 330 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனது இந்த நல்ல மனதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.மக்களுக்காக உழைக்க அவர்கள் முன் வர வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications