முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு: கருணாநிதி ஆதரவு
சென்னை:
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடே வழங்கக் கூடாது என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரியான பதிலைத் தரவேண்டிய கட்டாயம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு பாராட்டுவிழா சென்னையில் நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து காண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு முன்மாதிரியாகதிகழ்ந்துள்ளது. ஆனால் அதை இங்குள்ள ஜெயலலிதாவும், பாஜகவினரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினாலும் பரவாயில்லை, ஆனால், யாரும்இட ஒதுக்கீடே வழங்கக் கூடாது என்று அவர் முழங்குகிறார்.
இதற்கு சரியான பதிலைத் தர வேண்டிய கட்டாயம் முஸ்லீம் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு உள்ளது.
40 தொகுதிகளும் நமக்கே என்று மக்களவைத் தேர்தலில் முழங்கினோம். உடனேயே பல சலுகைகளை வாரிவழங்கினார் ஜெயலலிதா. அதேபோல, 234 சட்டசபைத் தொகுதிகளும் நமக்கே என்று முழங்கினால்தான்,முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் போலத் தோன்றுகிறது என்றார் கருணாநிதி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications