டெல்லிக்கு போகும் தலைமை செயலகம் விவகாரம்
டெல்லி:
ரூ.50 கோடிக்கு அதிகமான மதிப்பில் கட்டடங்களைக் கட்டும்போது மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவு தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்க, மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின்கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூட்டவுள்ளது.
ரூ.50 கோடிக்கு அதிகமான மதிப்பிலோ, ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் வகையிலோபெரிய கட்டடங்களைக் கட்டும்போது மத்திய அரசின் முன்அனுமதி பெறவேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் கடந்த மாதம் 7ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது.
சென்னையில் தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடுக்கவே இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த மாநாட்டில் மத்திய அரசுக்கு எதிராக, குறிப்பாக திமுகவைச்சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, இன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு எதிராக அதிமுக அரசுகடும் கண்டனக் குரல் எழுப்பும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் உத்தரவு, மாநில அரசுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று கூறி, உயர் நீதிமன்றத்தில்தமிழக அரசின் சார்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மனுத் தாக்கல் செய்தது. இதனையடுத்து கடந்த26ம் தேதி உயர் நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் கூட்டத்தை அடுத்த மாதம் 8ம்தேதி கூட்டியுள்ளது. இது ஒரு வழக்கமான கூட்டம் தான் என்று மத்திய அமைச்சகம் கூறியிருக்கிறது.
இருப்பினும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் உத்தரவு தொடர்பாக மாநில அரசுகளிடம் கருத்து ஒற்றுமையைஏற்படுத்தவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications