திருப்பதியில் குடிமகன்களுக்கு தடை
திருப்பதி:
மது அருந்தியவர்கள் திருப்பதி திருமலைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் மது, இறைச்சி, சிகரெட், குட்கா, பான்பராக் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும்திருமலையில் குடிபோதையில் கலாட்டா செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருமலையில் வசிக்கும் சிலர் திருப்பதிக்கு வந்து மது அருந்தி விட்டு திருமலைக்கு செல்வதாகதேவஸ்தானத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் திருமலை அடிவாரமான அலிபிரி அருகில் திருமலைக்குசெல்பவர்களை ஒரு நாள் பரிசோதித்தனர். அப்போது ஏறத்தாழ 100 பேர் மது அருந்தி விட்டு திருமலைக்கு செல்லமுயன்றது கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தேவஸ்தான ஊழியர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும்திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து இனி தினமும் அலிபிரி அருகில் "பிரீத் அனலைசர்" கருவியால் அனைவரையும் பரிசோதித்தபிறகே திருமலைக்கு செல்ல அனுமதிப்பது என்றும், குடித்து விட்டு பிடிபடும் திருமலைவாசிகளுக்கு ஒருமுறைஅபராதம் மட்டும் விதிப்பது; மீண்டும் தொடர்ந்து குடித்து விட்டு வந்தால் அவர்களை திருமலையில் இருந்துநிரந்தரமாக வெளியேற்றி விடுவது என்றும் முடிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications