-த-மி-ழ-க அரசை கலைக்க முயற்சி: பொன்னையன்
சென்னை:
தமிழக அரசைக் கலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக நிதியமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக தலைவர் கருணாநிதி எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தால் சட்டசபைக்கு வராமாட்டார். அவருடையவழியை இப்போது எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும் பின்பற்றுகிறார்.
எதிர்க்கட்சிகள் சபைக்கு வந்து தங்களது ஜனநாயகப் பொறுப்பை ஆற்றாமல் சாலையிலே கோஷம் போடுவதும்,வீதியிலே சட்டசபை நடத்தி விளையாடுவதும் வேதனையானது. ஜனநாயகம் இவர்களுக்கு விளையாட்டாகப்போய் விட்டது. மக்கள் இதற்காகவா இவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்?
முன்பெல்லாம் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் முறையாக உரையைத் தயாரித்து வந்து பேசுவார். ஆனால் இப்போதுகருணாநிதியோடு சேர்ந்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்பது போல பேசிவருகிறார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா தமது அறிக்கையை சரியாக தயாரிக்கவில்லை என்றுஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஜெயலலிதா பத்திரிக்கையாளர்கள் பேட்டியாக இருந்தாலும், சட்டசபையானாலும் ஆய்வுக் கூட்டங்களாகஇருந்தாலும் சரியான தகவல்களின்றி பேசியது கிடையாது. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்றவர்கள்சட்டசபைக்கு வராமல் மனம் போனபடி பேட்டி தருவது கோழைத்தனம். துணிச்சல் இருந்திருந்தால் அவர்சட்டசபைக்கு வந்து வாதங்களில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட அரசின் மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று எதிர்க்கட்சிகள்ஆளுநரை வற்புறுத்துகின்றன. இதன் மூலம் அரசின் அன்றாட நடவடிக்கைகளை முடக்க எதிர்க்கட்சிகள்திட்டமிடுகின்றன.
அரசை செயலற்றதாக்கி, நலத்திட்டப் பணிகளையும், முன்னேற்ற திட்டங்களையும் நடத்த விடாமல் செய்யமுயல்கின்றன. இதன் மூலம் தமிழக அரசைக் கலைக்க முயல்கின்றன.
சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பதை யாரும் தடுக்கவில்லை. இருப்பினும் கூட்டத் தொடரில்கலந்து கொள்ளாமல் ஜனநாயகக் கடமையை ஆற்றத் தவறிவிட்டனர். இதன் மூலம் அவர்களைத் தேர்ந்தெடுத்துஅனுப்பிய மக்களுக்குத் துரோகம் இழைத்து விட்டனர். அவர்களது நடவடிக்கைகள் மக்களுக்கு எதிரானவைஎன்று கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications