-பைக்-கில் சென்றவரின் கழுத்தை அறுத்த பட்ட நூல் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் பட்டம் ஒன்றின் நூல், மோட்டார் சைக்கிளில் சென்றவரின் கழுத்தை அறுத்து படுகாயப்படுத்தியது.

சென்னை நக-ரில் பட்டங்கள் விடுவது சமீப -நாட்களாக அதிக-ரித்துள்ளது. காற்று பலமாக அடிப்பதால்சிறுவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் பட்டம் விடுகின்றனர். இந்த பட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளநூல்களில் மாஞ்சா எனப்படும் கண்ணாடித் துகள்கள் மற்றும் பசையைக் கலந்து தடவி அதற்கு வலுவேற்றுகின்றனர்.

வலுவான நூல் இருந்தால்தான் மற்ற பட்டங்களை டீல் (அடுத்த பட்டத்தை அறுப்பது) விட முடியும் என்பதால் இந்தவிப-ரீதமான செயலில் இளைஞர்களும், சிறுவர்களும் ஈடுபடுகின்றனர். –இ-த-னால் பட்ட நூல் கயிறுகளில் சிக்கிதினந்தோறும் பலர் காயப்பட்டு வருகிறார்கள்.

இந் நிலையில் கோடம்பாக்கம் சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் அண்ணா சாலையில்மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வேகமாக வந்த பட்ட நூல்,ரவிச்சந்திரனின் கழுத்தில் சுற்றிக்-கொண்-ட-து.

இதில் கழுத்து, கன்னம், கைகள் ஆகியவற்றில் ரவிச்சந்திரனுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மாஞ்சா தடவுவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இருப்பினும் தடையை யாரும் பொருட்படுத்துவதாகத்தெயவில்லை. சமீபத்தில் கூட இரண்டு பேர் மாஞ்சா நூலினால் படுகாயமடைந்தனர், அவர்களில் ஒருவர்மரணமடைந்து விட்டார் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+