"நியூ" படத்துக்கு பெண் எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு
சென்னை:
பெண்களைக் கேவலமாகவும், இழிவாகவும், மோசமான கண்ணோட்டத்துடனும் சித்தரித்து நியூ படத்தைஎடுத்துள்ளார் என்று இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.பாலபாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், நியூ படத்தில் பச்சை பச்சையான வசனங்கள், ஆபாச காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை.பெண்களை செக்சுக்கு அலைபவர்களாக அவர் சித்தரித்துள்ளார்.
எட்டு வயதுப் பையன் என்னவெல்லாம் பேசக் கூடாதோ அதையெல்லாம் இந்தப் படத்தில் பேச வைத்துள்ளார்கள்.நீ அப்பாவாகி விட்டாய் என்று 8 வயது சிறுவனிடம் ஒரு நர்ஸ் சொல்வது போல காட்சி வைத்துள்ளார்கள். இதன்மூலம் சிறுவர்களையும் கெடுக்கிறார்கள்.
பெண்கள் புடவை கட்டுவதால்தான் மக்கள் தொகை பெருகி விட்டதாக ஒரு வசனம் வருகிறது. இதெல்லாம்பெண்களை மிகவும் கேவலப்படுத்துவது போல உள்ளது.
தமிழர்களின் கலாச்சாரமான சேலையை கவர்ச்சி பொருளாக சித்தரித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் தமிழ்க்கலாச்சாரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத, கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் படம் என்று குமுறுகிறார் பாலபாரதி.
படம் வெளியாகி மூன்று –வாரங்கள் –ஆன நிலையில், சூர்யா புதிதாக ஒரு பாடலைச் சேர்த்துள்ளார். கிரண் வரும்காட்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாக வந்த செய்திகளால் இப்போது அவருக்கு தனியாகஒரு பாட்டை செருகியுள்ளார்.
மார்க்கண்டேயா நீ வருவாயா என்ற இந்தப் பாடல், படம் வெளியான போது கிரண் காட்சிகளில் பின்னணிஇசைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது படத்தின் டெம்ப்டேஷனைக் கூட்டுவதற்கு கிரணை தேவையானஅளவுக்கு உரித்து, இந்த பாடலை ரூ.25 லட்சம் செலவில் படமாக்கியுள்ளார் சூர்யா.
ஆனால் இந்தப் பாடல் காட்சிக்கு அனுமதி அளிக்க சென்ஸார் போர்டு மறுத்து விட்டது. இதையடுத்து சூர்யாரிவைசிங் கமிட்டிக்கு மேல் முறையீடு செய்ய மும்பை சென்றுள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications