தோல்விக்கு பின்னும் ஜெ. மாறவில்லை: வைகோ
தேனி:
மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தும் முதல்வர் ஜெயலலிதாவிடம் எந்த மனமாற்றமும் ஏற்படவில்லைஎன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
பள்ளிகள் கட்டடங்களில் இயங்க வேண்டும் என்று கூறுவது சரிதான். ஆனால் பெரும்பாலான தமிழ் வழிக் கல்விகற்பிக்கும் பள்ளிகள் கூரையில் தான் நடக்கிறன்றன. எனவே கூரைகளை ஒழிக்கும் நடவடிக்கை தமிழ் வழிக்கல்விக்கு எதிராகப் போய்விடக்கூடாது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சென்னையில் பல பெண்கள்கொலை செய்து கொள்ளை அடித்துள்ளனர். இதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.50 நாட்களுக்கு மேல் நடக்க வேண்டிய சட்டமன்றக் கூட்டத்தை 8 நாட்களில் நடத்தி முடித்து விட்டால்ஜனநாயகம் செத்து விட்டது என்று தான் அர்த்தமாகும்.
இதைத்தான் எங்கள் கூட்டணி சார்பில் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தேன். அப்போது 365 பிரிவு சட்டத்தைபயன்படுத்தி அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை.
வரும் 5ம் தேதி நான் மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணத்தை, ஜாதி பேதங்களும் மத வெறியர்களும்எதிர்காலத்தில் தலை எடுக்க கூடாது என்பதற்காக நடத்துகிறேன்.
மத்தியில் நடக்கும் கூட்டணி அரசுக்கு மதிமுக நிபந்தனையற்ற ஆதரவை எப்போதும் அளிக்கும்.
பெட்ரோல், டீசல் விலையுயர்வினால் சாதாரண மனிதன் பெரிதும் பாதிக்கப்படுகிறான். இந்த விலையுயர்வு மத்தியஅரசின் நிலைத்தன்மையை பாதிக்கும். எனவே மத்திய அரசு இந்த விலையுயர்வை திரும்பப்பெற வேண்டும்.
தேர்தலில் தோல்வி ஏற்பட்டும் ஜெயலலிதாவின் போக்கில் எந்த மன மாற்றமும் இல்லை.
அவ்வாறு மன மாற்றம் ஏற்பட்டிருந்தால் சட்டமன் றத்தை 50 நாட்களுக்கு மேல் நடத்தி இருப்பார் என்றார்வைகோ.












Click it and Unblock the Notifications